
பிப்ரவரி 28, சென்னை (Chennai News): பெண்கள் முகம் மற்றும் கைகளை அழகாக வைத்திருந்தாலும், கழுத்துப்பகுதி கருமையாக இருக்கும். இதற்கு காரணம், அதிக கொழுப்பு சேர்வதும், அதிக அளவு வேர்வை சுரப்பது, இறந்த செல்கள் படிவதாலும் இந்த கருமை உண்டாகிறது. இதை சரியாக பராமரிக்காமல் விடுவதால் கழுத்தைச் சுற்றி கருமை நிறம் உண்டாகிறது.
எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்
தக்காளி சாறு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கடலை மாவு - 1 ஸ்பூன்
வடித்த தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறு, மஞ்சள் தூள், கடலைமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் கருமை உள்ள பகுதியில் தடவ வேண்டும். பின் 10 முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வர ஒரு மாதத்தில் கருமை நீங்குவதை காணலாம். First Night Tips: உங்கள் முதலிரவு... இனிய இரவாக... தாம்பத்ய வாழ்க்கைக்கான விதிகள தெரிஞ்சிக்கோங்க.!
காஃபி தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்
சர்க்கரை - 1 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன் இவைகளை ஒன்றாக கலந்து கழுத்து கருமைக்கு ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். 15 நிமிடத்திற்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
உப்பு 1 ஸ்பூன், உருளை கிழங்குச்சாறு 1 ஸ்பூன் கலந்து பயன்படுத்தலாம். இது இறந்த செல்களை அதிகமாக நீக்குகிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இதை தொடர்ச்சியாக செய்து வர விரைவிலே கழுத்து கருமை நீங்கி இயற்கை அழகு பெறும். மேலும் முகத்திற்கு ஃபெஷியல் பேக் ஏதாவது அப்ளே செய்தால் கழுத்திற்கும் அப்ளே செய்யலாம்.