Couple sleeping together at night (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 27, சென்னை (Chennai News): ஆயிரம் இரவுகள் வாழ்க்கையில் வந்தாலும், இதுதானே அவர்களுக்கு முதலிரவு! ஒரு பக்கம் எதிர்ப்பார்ப்புகளும் உள்ளக் கிளர்ச்சியும், மறுபக்கம் அச்சமும் படபடப்பும். முதலிரவுக்கு முன்பாக பெரும்பாலான புதுமணத் தம்பதிகளின் நிலை இதுதான்.

இப்படியெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்

ஆபாசப் படங்கள், பார்ன் வீடியோக்கள் போன்றவற்றை பார்த்து, நீங்களாகவே கற்பனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம். உண்மையான உறவு, வெறும் உடல் தொடர்பானது மட்டுமல்ல. அது இருவரின் உணர்வுகளுடன் பிணைந்தது. ஆண்கள் இதை, அவர்களின் ஆண்மையை நிரூபித்துக் காட்டும் போட்டி மைதானமாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. முதலிரவிலேயே எல்லாவற்றையும் நிரூபித்து ஆகவேண்டியதில்லை. மேலும், தம்பதியினர் திருமணத்துக்கு முன்பு ஒருவருக்கொருவர் பழக்கமில்லாதவராக இருந்தால், இருவருக்குமே உடலளவிலும், மனத்தளவிலும் நெருக்கமாக கொஞ்ச காலம் பிடிக்கும். அதன் பிறகு, உடலுறவில் உங்கள் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம். Women Gym Wear: கவனிக்க வேண்டிய ஜிம் ஆடைகள்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

நிபுணர்களின் ஆலோசனை

திருமணத்துக்கு முன்பாக தகுந்த அலோசகர்களிடம் ப்ரீமேரிட்டல் கவுன்சலிங் எடுத்துக்கொள்வது முதலிரவு அச்சங்களை குறைப்பதில் பெரும்பங்கு ஆற்ற முடியும். திருமணம் என்பது வெறும் முதலிரவு மட்டுமல்ல, அதற்கு பிறகு தொடரக்கூடிய அனைத்தும் தான். மறக்க முடியாத இரவை உருவாக்குவது மட்டுமல்ல, மறக்கமுடியாத வாழ்க்கையை இணைந்து உருவாக்குவதன் தொடக்கமும் இதுதான்.

சரியான தகவலைப் பெறுங்கள்

அச்சங்களை தவிர்க்க சரியான வழி அறிவை வளர்த்துக்கொள்வதே. புதிதாக திருமணமான ஆண்களுக்கு விந்து முந்துதல் ஏற்படுவது அனுபவமின்மை மற்றும் பதற்றத்தால் தான் தானே தவிர, சுயஇன்ப பழக்கத்தால் அல்ல. இது பொதுவானதே. அதேபோல, ஆணின் உறுப்பின் அளவைவிட, தன்னை மிகவும் நேசிக்கும் அக்கறைச் செலுத்தும் துணைவரையே பெண் விரும்புகிறார். பெரும்பாலான பெண்கள் உறவின் போது கண்களை மூடிக்கொள்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா? உடலுறவுக்கு தயாராவதற்கு முன்பாக ஒரு பெண் தன் துணைவரை புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் விரும்புகிறாள். நம்பகமான நண்பர்கள், மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசர்களின் அறிவுரைகள் உங்களுக்கு உதவும்.