மே 13, சென்னை (Chennai): சருமத்தில் இறந்த செல்களை அகற்றவும், முகப்பருக்களை குறைக்கவும் ஸ்கரப் பயன்படுகிறது. அதிலும் வீட்டிலேயே கிடைக்கும் பழ ஸ்கரப் சருமத்தை மேலும் பொழிவாக்குகிறது. ஸ்கரப் பயன்படுத்திய பிறகு டோனர் அல்லது ரோஸ் வாட்டர் உபயோகிக்க வேண்டும்.
வாழைப்பழ ஸ்கரப்: வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து மசித்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி சக்கரை சேர்த்துக்கொள்ளவும். சிறிது தேன் அல்லது தயிர் சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 5 நிமிடத்திற்கு உலர விட்டு, பின் குளிந்த நீரில் கழுவிட வேண்டும். Landslide On Mountain Road: மலைச்சாலையில் மண் சரிவு.. கொடைக்கானல் செல்வோர்க்கான அறிவிப்பு..!
பப்பாளிபழ ஸ்கரப்: தோல் சீவிய பப்பாளி பழத்தை அரைத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தயிர், தேன், மற்றும் நான்கு துளி எலுமிச்சை சேர்த்து கலந்து கொள்ளவும். இக்கலவையை 5 முதல் 7 நிமிடம் முகத்தில் தடவி உலரவிட்ட பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
எலுமிச்சை ஸ்கரப்: அரை எலுமிச்சை பழத்தை வெட்டி சர்க்கரையில் தொட்டு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின் 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும். இந்த ஸ்கரபை முகத்தைவிட கை கால்களில் பயன்படுத்தலாம். ஏனெனில் பலருக்கு முகத்தின் தோல் மென்மையாக இருப்பதால் அது சருமத்தை பாதிக்கும்.