செப்டம்பர் 24, சென்னை (Fashion Tips): நெயில் பாலிஷ் போடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாகும். விழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றின் போது கட்டாயம் பெண்கள் அவர்களின் ஆடைகளுக்கு ஏற்ப விதவிதமான டிசைகளில் நெயில் பாலிஷ் போடுவார்கள். அப்போது ஏற்கனவே இருக்கும் நெயில் பாலிஷை ரிமூ செய்வது சற்று கடினமான வேலையாகும். அப்பொழுது நெயில் பாலிஷ் ரிமூவரை பயன்படுத்தி ரிமூ செய்து கொள்வர். இது இல்லையேனில் சிலர் ஏதேனும் பொருளைக் கொண்டு சுரண்டி எடுத்துவிட்டு பயன்படுத்துவர். இது இரண்டுமே நகங்களை விரைவில் பாதித்துவிடும். நகங்களை பாதிக்காமலும், அதிக செலவு செய்யாமலும் எளிமையாக நெயில் பாலிசஷை ரிமூ செய்யலாம். Fertility Management: நெல்பயிரில் இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை.. விபரம் உள்ளே..!
எளிய முறையில் நெயில் பாலிஷ் ரிமூவ் செய்ய:
- கைக்கு பயன்படுத்தும் ஹேண்ட் சானிடைசரை பயன்படுத்தி எளிதில் நெயில் பாலிசை ரிமூவ் செய்யலாம். காட்டன் துணியில் சிறிதுதளவு ஹேண்ட் சானிடைசரை போட்டு நகங்களின் மீதுள்ல நெயில் பாலிசில் தேய்க்கவும். இது ரிமூவலைப் போலவே சுத்தப்படுத்திவிடும்.
- வீட்டில் பயன்படுத்தும் டூத்பேஸ்டை பயன்படுத்தி நகங்களின் நெயில் பாலிஷை நீக்க முடியும். நகங்களில் பேஸ்டைத் தடவி சிறிது சிறிதாக தேய்த்து எடுக்கலாம்.
- டியோடிரண்டை நெயில் பாலிஷ் ரிமூவலாகப் பயன்படுத்தலாம். இதை நகங்களில் ஸ்பிரே செய்து காட்டன் பேட் அல்லது துணியைப் பயன்படுத்தி ரிமூவ் செய்யலாம். இது நெயில் பாலிஷ் ரிமூவல் போல் உடனடி ரிசல்ட் தராமல் சற்று டைம் எடுக்கும். இருப்பினும் இது நகங்களை பாதிக்காது.
- இதைப்போலவே பர்ஃபியூமை டிஷூ பேப்பரில் ஸ்ப்ரே செய்து நகங்களின் தேய்த்து செயில் பாலிசை சுலபமாக அகற்றலாம்.
- எலுமிச்சை சாற்றில் பேக்கிங் சோட கலந்து காட்டன் துணியை முக்கி நகங்களில் உள்ள பாலிசை நீக்கலாம். முழுவதும் நீங்க சற்று நேரம் எடுக்கும்.
- தேங்காய் எண்ணையை நகங்களில் தடவி துணியை பயன்படுத்தி தேய்த்து எடுக்கலாம்.