Makeup (Photo Credit: Pixabay)

டிசம்பர் 23, சென்னை (Party Tips): 2025ம் ஆண்டை வரவேற்க உலகம் முழுவதும் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். புதிய வருட பிறப்பு என்பதால் பலரும் குடும்பத்தோடு புத்தாண்டு நாளில் இருப்பார்கள். அன்றைய தினமும் எப்போதும்போல் டிவி பார்ப்பது, அரட்டை அடிப்பது என பொழுதைக் கழிப்பார்கள். சிலர் பார்ட்டிக்கு போய் கொண்டாடுவார்கள். அவ்வாறு இந்த புத்தாண்டிற்கு பார்ட்டிக்கு செல்வோர் பார்லர் செல்லாமலேயே வீட்டில் மேக்கப் செய்யும் எளிய வழிமுறைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

ப்ரி மேக்கப்:

உங்கள் முகத்தை முதலில் சுத்தப்படுத்த, கிளன்சர் (சோப் அ ஃபேஸ் வாஷ்) பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் கழுவி மென்மையாக துடைக்க வேண்டும். பின் 5 நிமிடத்திற்கு சுடு தண்ணீரின் ஆவியில் முகத்தை ஸ்டீமிங் செய்ய வேண்டும். இது முகத்தில் உள்ள அழுக்கை சுத்தப்படுத்துகிறது. பிறகு எதேனும் ஒரு பேஸ் ஸ்கர்பை 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்யும் விதத்தில் தேய்த்து 10 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். அடுத்தது ஃபேஸ் மாஸ்க் வீட்டில் செய்த அல்லது கடைகளில் கிடைக்கும் ஃபேஸ் மாஸ்கை வாங்கி அப்லே செய்து கழுவி ரோஸ் வாட்டர் அல்லது சீரம் பயன்படுத்தவும். பிறகு மாய்ஸ்டரைசரை முகம் முழுவதும் அப்லை செய்ய வேண்டும். இது நாம் பயன்படுத்தும் மேக்கப் புராடக்டின் கெமிக்கல்ஸ் சருமத்தினுள் செல்லாதவாறு பாதுகாக்கிறது. இனி மேக்கப் போட ஆரம்பிக்கலாம். Astrology: 2025 ஆம் ஆண்டு திருவோணம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

மாய்ஸ்டரைசரை அப்லை செய்து சற்று நேரம் கழித்து ஃபௌண்டேசனை போடவேண்டும். இது உங்கள் ஸ்கின் நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இது உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் , பருக்கள், தழும்புகள் போன்ற பகுதிகளில் சற்ற அதிகமாக தடவி ஸ்பான்ச் வைத்து உட்புறமிருந்து வெளிப்புறமாக சமமாக பரவும் படி மென்மையாக வைத்து பரப்ப வேண்டும். கழுத்தும் முகமும் உங்கள் நிறத்துடன் ஈவனாக உள்ளதா என பார்க்கவும் இல்லையெனில் மேக்கப்பை கழுத்துக்கும் சேர்த்து போடவேண்டும். கன்சீலர் கருவளைத்தில் லேசாக தடவி விரல் வைத்து மெதுவாக பரப்பவேண்டும். அடுத்ததாக ரோஸ் பவுடரை பிரஸ் வைத்து முகத்தில் தட வேண்டும். இது எண்ணெய் தன்மையை அகற்றி முகத்தை ஃப்ரஸாக வைக்க உதவுகிறது. முகத்தை வடிவமாக காட்ட விரும்பினால் உங்கள் நிறத்தை விட குறைவான நிறத்தில் பிரவுன்ஸர் பயன்படுத்தி, கன்னத்தின் கீழ் மற்றும் நாடியில் பிரஸ் வைத்து இரு முறை லேசாக தடவ வேண்டும்.

ஸ்மோக்கி ஐஸ்:

இயற்கையான புருவங்களுக்கு பின் புறமிருந்து ஆரம்பிக்க வேண்டும். உங்களுக்கு பிடித்த ஷேடிங்கை பயன்படுத்துங்கள். ஐ ஷடோ பயன்படுத்தி இமைகளில் பிரஸ் வைத்து உங்களின் உடைக்கு தகுந்த கலரின் ஷேடை தடவ வேண்டும். இதன் மேல் ஐ லைனரை போலடாம். சிறிய கண்கள் இருந்தால் அடர்த்தியாக ஐ லைனரை போடலாம். நுனியை சற்று நீளமாகவோ அடர்த்தியாகவோ போட்டால் கண்கள் உடனே பார்ப்பவர்களை ஈர்த்துவிடும். ஸ்மோக்கி ஐஸ் மேலும் அடர்த்தியாக தெரிய, கண்களின் கீழ் குறைவான பகுதியில் பிரவுன் ஷேடோவை லேசாக போடலாம். தேவைப்பட்டால் இமைகள் அதிகமாக தெரிய ஃபால்ஸ் ஐலாஸ் வைக்கலாம். மஸ்காரா பயன்படுத்தி இமைகளை கருமையாக்கி அழகுபடுத்தலாம். கடைசியாக ப்ளஷ் கன்னங்களில், கழுத்தெழும்பு பகுதிகளில் லேசாக தடவலாம். இதையும் நிறத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

உதடுகளில் லிப் பாம் பயன்படுத்தி லிப் மேக்கப் செய்தால் நீண்ட நேரம் மேக்கப் நீடிக்கும், உதடு வறட்சியை தடுக்கிறது. சிறிய உதடுகள் உள்ளவர்கள் லிப் லைனர் உதடு ஓரங்களில் பயன்படுத்தி சற்று பெரியதாக காட்டலாம். பின் உங்களுக்கு விருப்பமான லிப் ஸ்டிக் ஷேட் கலரை உதட்டில் பயன்படுத்தலாம். இறுதியாக மேக்கப் செட்டர் ஸ்பெரே செய்தால் எளிய பார்ட்டி மேக்கப் முடிந்தது.