Models (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 27, சென்னை (Chennai News): கோடையில் உடல் அதிகமாக வெப்பமாகும். உடலை சீரான வெப்பநிலையில் வைப்பதற்கு அடிக்கடி தண்ணீர் அருந்தவேண்டும். இதனால் வேர்வை வெளியேறிக் கொண்டே இருக்கும். இறுக்கமான ஆடைகள் கோடைகாலத்தில் உடலிற்கு தேவையான காற்றோட்டத்தை தடுத்துவிடுகிறது. இதனால் வியர்வை வெளியேறாமல் டிரஸில்லேயே படிந்துவிடுகிறது. வியர்வை அங்கேயே படிவதால் தோலில் வியர்க்குரு, நாற்றம், அரிப்பு போன்ற தோல் சார்ந்த வியாதிகள் வரக்கூடும். இவைகளை தவிர்க்க கோடையில் தளர்வான, வியர்வை உறிஞ்சும் ஆடைகள் அணிவது நல்லது.

ஜெகின்ஸ்:

பெண்களிடையே ஜீன்ஸ் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் இது கோடைக்கு ஏற்றதல்ல இது உடலை இறுக்கிப் பிடித்து காற்றோட்டத்தை தடுகிறது. கோடையில் ஜீன்ஸிற்கு பதிலாக ஜெகின்ஸை அணியலாம். இது காடனிலும் மற்றும் பனியன் க்ளாத்திலும் கிடைக்கிறது. மேலும் ஜீன்ஸை விட ஜெகின்ஸ் அணிவதற்கு சௌகரியாமாக இருக்கும். மேலும் பார்க்க ஜீன்ஸ் போன்றும் தெரியும். பல டிசைன்களிலும், கலரிலும் கிடைக்கிறது. ஜீன்ஸை விட மிக கம்ஃபர்ட்டாக இருக்கும் இது அனைத்து உடல் வடிவத்திற்கும் ஏற்றது. இதிலும் ஹைவெஸ்ட், லோவெஸ்ட், டோன்டு, ப்லாசோ என எல்லா விதங்களிலும் கிடைக்கிறது. Jeggings: அடிக்கிற வெயிலுக்கு ஜீன் போடுறீங்களா? அப்போ உடனே ஜெகின்ஸ்க்கு மாறுங்க..!

லைட் கவுன்ஸ்:

கவுன் அனைத்து பெண்களுக்கும் பிடித்தமான ஒன்றாகும். இது குளிர்காலத்தை விட சம்மரிலேயே மிக கச்சிதமாக பொருந்தும். பருத்தி அல்லது ஜார்ஜெட் துணியால் செய்த கவுன்கள் சம்மரில் சருமத்தில் வியர்வை சேராமல் பாதுகாப்பதுடன் ஸ்டைலாகாவும் இருக்கும். இதை ஆப்ஃபீஸ்களுக்கு கூட அணியலாம். மேக்ஸி, சார்ட், ஃபிரில் என அனைத்து விதங்களிலும் இந்த கவுன்கள் இருக்கின்றன. இடத்திற்கு ஏற்ற தேர்வு செய்து அணியலாம். மேலும் கவுன்கள் அடர்நிறங்களில் இல்லாமல் லைட் கலர்களில் இருக்குமாறு இருப்பது வெப்பத் தாங்கும்.

லைட்வெயிட் பைஜாமாஸ்:

இரவில் உறங்கும் போது அணிய, அனைவரின் விருப்பத் தேர்வாக இருப்பது பைஜாமா தான். கோடையில் லைட்வெயிட் பருத்தி பைஜாமாக்கள் உடலிற்கு மிக ஏற்றதாக உள்ளது. கண்ணாடி போல் மெலிதாக இருப்பதால் இரவில் வியர்வை தங்காமல் சருமத்தில் காற்றோட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் பருத்தி பைஜாமாக்கள் இரவில் உடல் அதிக வெப்பமடையாமல் பாதுகாக்கவும் செய்கிறது.

லவுன்ஞ்ச்வேர்:

வீடுகளில் இருக்கும் போது தளர்வான லவுன்ஞ்ச்வேர் ஆடைகளை அணியலாம். இவைகளுக்கு தூங்கும் போது அணியும் பைஜாமாக்கள் போன்றிருக்காது. இவை மென்மையான துணியால் ஈரத்தை ஊறிஞ்சும் தன்மை உடையவை. தடிமனான ஷாட்ர்ஸ் டிஷர்ட்டுகளுக்கு பதில் பயன்படுத்தலாம். இந்த மேலும் கடற்கரைக்கு செல்லும் போது இந்த உடை பொருத்தமான ஒன்றாகும். இதில் ஓவர்சைஸ்ட் மற்றும் ஓவர்கோட் லவுன்ஞ்ச்வேர் கோடையில் அணிய சௌகரியமான ஒன்றாகும். நாள் முழுவதும் அணிய இது ஏற்றதல்ல.