
பிப்ரவரி 18, சென்னை (Chennai News): கோடைகாலம் தொடங்கிவிட்டது குளிர்காலத்தில் பயன்படுத்திய சுவெட்டர் போன்ற பல உடைகள் தற்போது தேவைப்படப் போவதில்லை. அதில் ஜீன்ஸும் ஒன்று ஆனால் நம்மில் பலரும் சீசன் பாரமல் ஜீன்ஸை ரெகுலராக அணிகிறோம். ஆனால் ஜீன்ஸ் கோடை காலத்திற்கு ஏற்ற உடை அல்ல. அது உடலை இறுக்கி பிடித்துக் கொள்ளும். கோடையில் உடல் அதிகமாக வெப்பமாகும். உடலை சீரான வெப்பநிலையில் வைப்பதற்கு அடிக்கடி தண்ணீர் அருந்தவேண்டும். இதனால் வேர்வை வெளியேறிக் கொண்டே இருக்கும். Ice Bath: பிரபலங்களின் ஐஸ் பாத்.. எவ்வாறு ஐஸ்ஸில் குளிப்பது? தவிர்க்க வேண்டியவர்கள் யார்? விபரம் உள்ளே.!
ஜெகின்ஸ்:
குளிர்காலத்தில் இதமாக இருக்கும் இந்த ஜீன்ஸ், கோடைகாலத்தில் உடலிற்கு தேவையான காற்றோட்டத்தை தடுத்துவிடுகிறது. இதனால் வேர்வை வெளியேறாமல் டிரஸில்லேயே இருந்துவிடுகிறது. வேர்வை அங்கேயே படிவதால் தோலில் வியர்க்குரு, நாற்றம், அரிப்பு போன்ற தோல் சார்ந்த வியாதிகள் வரக்கூடும். இவைகளை தவிர்க்க ஜீன்ஸ் அணியாமல் அதற்கு பதிலாக ஜெகின்ஸை அணியலாம். இது காடனிலும் மற்றும் பனியன் க்ளாத்திலும் கிடைக்கிறது. மேலும் ஜீன்ஸை விட ஜெகின்ஸ் அணிவதற்கு சௌகரியாமாக இருக்கும். மேலும் பார்க்க ஜீன்ஸ் போன்றும் தெரியும். பல டிசைன்களிலும், கலரிலும் கிடைக்கிறது. ஜீன்ஸை விட மிக கம்ஃபர்ட்டாக இருக்கும் இது அனைத்து உடல் வடிவத்திற்கும் ஏற்றது. இதிலும் ஹைவெஸ்ட், லோவெஸ்ட், டொன்டு என எல்லா விதங்களிலும் கிடைக்கிறது.