People (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 28, சென்னை (Chennai News): தலைமை பொறுப்பில் வெற்றிகரமாக செயல்படுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. தனக்கு கீழ் பணிபுரியும் அனைவரையும் ஒரு குழுவாக வேலை செய்ய வைப்பது, அவர்களால் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் முன்னின்று அதில் பொறுப்பேற்றுக் கொள்ளவது போன்றவைகள் வேலையில் கடினமான செயலாகும். அதிலும், இன்றளவும் இருக்கும் மறைமுக ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் தலைமை பொறுப்பை வகிப்பது என்பது சவலான ஒன்றாகும். பெண்களுக்கு இயற்கையாகவே முடிவெடுக்கும் திறனின் தனித்துவம் காணப்படும். இதனால் பல பிரச்சனைகளும், பாராட்டுகளும் வரக் கூடும்.

மன, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை

தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்கள் அவர்களின் உடல் நலனில் அக்கறையுடன் இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். உடலையும் மனதை யும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலமே சரியான முடிவுகளை எடுக்க முடியும். மேலும் உடல்நிலை பாதிப்படைந்தால் வேலையில் முழு ஈடுபாட்டுடன் செய்ய இயலாது. அதிக வேலைபளு சேர்ந்து விடும். இதனால் மன அழுத்தம் உண்டாகி, குறித்த நேரத்தில் வேலை செய்ய முடியாமல் ஆகிவிடும். இதனால் தலைமை பொறுப்பிற்குரிய பொறுமையை இழக்க நேரிடும்.

தன்னம்பிக்கை

இன்றைய காலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவைப்படுவது தன்னம்பிக்கையே. அவர்களாகவே தனித்து பெரிய வேலைகளையும் தாங்களாகவே செய்ய முடியும் என்ற நம்பிக்கை வைக்க வேண்டும். தலைமை பதிவி வகிக்கும் பெண்களுக்கு கூடுதலாகவே தன்னம்பிக்கை இருக்க வேண்டும். வேலைகளில் பிறர் உங்கள் மீது நம்பிக்கை வைக்க முதலில், உங்களால் அதை செய்து முடிக்கும் தகுதியும் வலிமையும் உங்களிடம் உள்ளது என நீங்கள் உணர வேண்டும். அப்போழுது தான் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் மீது பிறர் நம்பிக்கை கொள்வர். ஒரு குறிக்கோள் இலக்குடன் பயணிப்பதற்கும் நம்பிக்கை உறுதுணையாக வரும். நம்பிக்கையுடன் ஒரு பெண் தலைமை வகித்தால் அந்த பாதை சரியானதாகவும் மேலும் உயரக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. Summer Wear: கோடையில் என்ன உடைகள் அணிவது..? உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்..!

உறவுகளை உருவாக்குதல்

தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு தேவைப்படும் பண்புகளில் முக்கியமானது பிறருடன் பழகும் முறையும், அவர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் நட்புமாகும். இது அந்த பணிச்சூழலை ஒரு பாஷிட்டிவாக மாற்றும். மேலும் மற்றவர்களுடன் பழகும் விதமும் மேம்படும். வேலையிடங்களில், மற்றவரைப் பற்றிய புரிதலும், மரியாதையும் கொடுக்கும் விதமும் கட்டயாம் இருக்க வேண்டியதாகும். பெண்களுக்கு அதிலும் பிறருடன் எப்பொழுதும் சிடுசிடுவென இருக்காமல், பொறுமையாக இருப்பது மிக அவசியமாகும். மேலும் தலைமை இடத்தில் இருக்கும் பெண்கள், பிறருக்கு கற்று கொடுப்பதும், வாய்ப்புகள் வழங்குவதும் சிறந்த பண்பாக இருக்கும்.

குறைகளை ஏற்றுக்கொள்ளுதல்

தலைமை இடங்களில் இருப்பவர்கள், வெற்றிகளை ஏற்றுக் கொள்வது போல தோல்விகள் நிகழ்ந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். டீம்களில் ஏதேனும் தவறுகள் நடந்தாலும் அடுத்தவரின் மீது குறை கூறாமல் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். டீம்களில் உள்ளவர்களும் செய்தாலும் சற்று பொறுமையக் கடைபிடித்து அவர்கலுக்கு புரிய வைக்க வேண்டும். மேலும் பன்முகத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

தலைமைப்பண்பில் தனித்துவம்

பெண்கள் எப்போதும் தனித்துவமாக பொறுப்புகளை நிர்வாகம் செய்ய வேண்டும். டீம்மில் உள்ள ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தங்களுக்கென தனி ஸ்டைலைப் பின்பற்ற வேண்டும். பணிகளில் அனைவரையும் அவர்களின் திறமையையும் சேர்த்தே அழைத்து செல்ல வேண்டும். தலைமைக்கு, முன்னுதாரனமாக நின்று அனைவருக்கும் நம்பிக்கையளிக்க வேண்டும். மறைமுக ஆணாதிக்க சமமூகத்தில் இருப்பதை என்றும் மறக்காமலும் தயங்காமலும் தலைமையை சரியாக வழிநடத்த வேண்டும்.