Home (Photo Credit: Pixabay)

ஜனவரி 27, புதுடெல்லி (New Delhi): இப்போது இருக்கும் வீடுகளில் போதுமான அளவு காற்று, வெளிச்சம் இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு இடப்பற்றாக்குறையும் ஒருகாரணமாக இருக்கிறது. வீட்டைச் சுற்றி நான்கு புறங்களிலும் கட்டடங்கள் கட்டப்பட்டதால் மூச்சு விடக்கூட முடியாத நிலையில் வீடுகள் உள்ளன.முன்பெல்லாம் வீடு கட்டும் போது வீட்டின் நடுவில் முற்றம் வைத்து வீடு கட்டுவார்கள். இதன் மூலம் காற்று மற்றும் சூரிய ஒளி வீட்டினுள் வந்து செல்கிறது. இப்போது அதற்கு பதிலாக வீடு கட்டும் போதே ஒடிஎஸ் வைத்துக் கட்டும் முறையை கடைபிடிக்கிறார்கள். ஒடிஎஸ் என்பதற்கு ஓபன் டூ ஸ்கை (Open To Sky (OTS) In House) என பொருளாகும்.

வீட்டிற்குள் ஒரு மூலையில் மேற்கூரையில் சிறு இடத்தை ஒதுக்கி சீலிங் அமைக்காமல் அதன் மீது கம்பி மற்றும் கண்ணாடி அல்லது ஒளி ஊடுருவக் கூடிய பொருட்களை கொண்டு தடுப்புகளை உங்களின் விருப்பத்திற்கேற்ப வைத்து மூடிக்கொள்ளலாம். கண்ணாடி வைப்பதால் மழைபெய்யும் போது மழைநீர் உள்ளே வராமல் தடுக்கிறது. வெளிப்புறக்காற்று வீட்டினுள் வருவதால் வீட்டின் வெப்பநிலையைக் கணிசமாகக் குறைக்கிறது. இந்த ஒடிஎஸ் அனைத்து வகை வீடுகளிலும் அமைக்க முடியும், இதை அமைப்பதற்கும் செலவுகள் அதிகம் ஆவதில்லை. பொதுவாக நான்கு பக்கங்களிலிருந்தும் அடைத்திருக்கும் வீட்டினுள் மக்கள் வசிக்க விரும்புவதில்லை. Honey Bees: மனிதனை காப்பாற்றும் தேனீக்கள்.. இல்லையென்றால் என்ன ஆகும்? விபரம் உள்ளே..!

OTS ன் பயன்பாடு:

வீட்டின் ஒவ்வொரு அறையிலும் காற்றோட்டம் மற்றும் ஒளி இருப்பது அவசியம், ஏனெனில் இந்த இரண்டும் இல்லாமல் இருந்தால் வீட்டினுள் உள்ளவர்கள் ஆரோக்கியமற்றவர்களாக மாறுகிறார்கள். இந்த நோக்கத்திற்காக வீட்டின் கதவுகள் , ஜன்னல்கள் ஆகியவை காற்றோட்டம் மற்றும் வெளிப்புறத்தைப் பார்க்கவும், இயற்கை ஒளியை வீட்டினுள் கொண்டு வரவும் அமைக்கப்படுகின்றன. இந்த ஓடிஎஸ்-ன் கீழ் அலங்கார செடிகள் மற்றும் சிலைகளை வைத்து வீட்டை அழகுபடுத்திக் கொள்ளலாம் அல்லது இருக்கைகள் அமைத்து அங்கு குடும்பத்தினரின் உரையாடல் மற்றும் புத்தகம் படிப்பது போன்றவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.