Home (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 26, சென்னை (Technology News): சொந்த வீடு என்பது பலருக்கு கனவாக இருக்கிரது. சிலருக்கு முதலிடாக இருக்கிறது. எப்படியானாலும் அவசரகாலங்களில் நிதி தேவை பூர்த்தி செய்யும் விதத்திலேயே மனை உள்ளது. ஆனால் சொந்தமாக வீடு அல்லது மனை வாங்குவதை விட அதை அவசரக் காலங்களில் விற்பதே மிக கடினமானது. இதனால் தான் ரியல் எஸ்டேட் சற்று ரிஸ்க் உள்ள முதலீடு என்பார்கள். நிதி நெருக்கடி காலங்களில் வேகமாக விற்க நினைப்பவர்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும். விரைவில் எளிய முறையில் வீட்டை விற்க சில எளிய வழிமுறைகளை வழங்குகிறோம்.

விரைவாக மனை அல்லது வீட்டை விற்க நினைப்பவர்கள் முதலில் ஒரு நல்ல ரியல் எஸ்டேட் ஏஜெண்டை, வீடு விற்பதற்கு நியமிக்க வேண்டும். அல்லது உள்ளூரில் ஒரு லேண்ட் புரோக்கரிடம் கூறலாம். இவருக்கு உள்ளூர் விலையும் அதை விற்கவும் தெரிந்திருந்திருக்கும். ஆனால் இவர்களுக்கு புரோக்கரேஜ் கமிஷன் தர வேண்டும் என்பது நினைவிருக்கட்டும். மேலும் குறையான கமிஷன் வாங்கும் நிறுவனமா, விற்கும் பணத்தில் எவ்வளவு தொகை செலுத்துமாறு இருக்கும் என தெரிந்து ஏஜெண்டுகளை நியமித்துக் கொள்ளவேண்டும். பணம் ஆவசரமாக தேவை இல்லையெனில் ஏஜெண்ட் இல்லாமல் பொருமையாக விற்க முடியும். WhatsApp Tips: வாட்ஸ் அப் டிப்ஸ்.. மெசேஜை இனி ஹைட் செய்து கொள்ளலாம்..!

விலை நிர்ணயம்:

வீட்டின் விலை சரியாக நிர்ணயம் செய்ய வேண்டும். இருக்கிறது என்பதற்காக அதிக விலையில் விற்றால் வீட்டை தகுந்த நேரத்தில் விற்க முடியாது. அந்த பகுதியில் நிலத்தின் மதிப்பு எவ்வளவு உள்ளது என்பதையும் வீடு கட்டிய செலவுகளையும் அதன் வயதையும் ஒப்பிட்டு மொத்தமாக கணக்கிட்டு விலையை நிர்ணயிக்க வேண்டும். விரைவில் விற்க வேண்டும் என நினைத்தால் அந்த பகுதியின் விலையிலிருந்து சற்று குறைவான மதிப்பை நிர்ணயித்தால் வேகமாக விற்க முடியும். பேரம் பேசுவருக்கு ஏற்றவிதத்திலும் தங்களுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு குறைக்கலாம்.

தூய்மையின் அவசியம்:

விற்கவிருக்கும் வீட்டை தூய்மையாக வைக்க வேண்டும். மேலும் அதிக பொருட்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். வீட்டை வாங்குபவர், நிறைய பொருட்கள் நிறைந்திருக்கையில் பார்த்தால் இடம் குறைவானதாகவும், பிடிக்காத உணர்வும் ஏற்படும். அதனால் விற்கவிருக்கும் வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் வைக்க வேண்டும். அலங்கார பொருட்களை சுவர் மற்றும் ஷோ கேஷிலும் வைத்தால் பார்வையாலர்கலை உடனே ஈர்த்துவிடும். இடம் அதிகமாக தெரிய பொருட்கள் இல்லாமல் இருப்பது நல்லது.

சுற்றுப்புறத்தையும் கவனிக்க வேண்டும்:

வீடு வாங்க வருபவருக்கு முதலில் வீடு அல்லது நிலம் அமைத்திருக்கும் இடத்தையும், அக்கம் பக்கம் எவ்வாறு உள்ளது என்பதையும் கவனிப்பார்கள். தாங்கள் விற்க நினைக்கும் வீட் டை உள்ளே அழகாக வைப்பதை விட வெளிபுறத்தூய்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

உடனடியாக விற்க நினைப்பவர்களுக்கு வீட்டில் பழுதானவைகளை உடனே மாற்றுவது நல்லது. தண்ணீர் குழாய்கள், கதவுகள், ஜன்னல்கள், கப்போர்டுகள் போன்றவற்றை சரிசெய்து வைக்க வேண்டும். பழைய விரிப்புகள் ஸ்கிரீன்களை மற்றி விட வேண்டும். தரைகள் சேதமடைந்திருந்தாலும் மாற்றுவது விரைவில் வீட்டை விற்க உதவும். புதிதாக அனைத்தையும் மாற்றுவதல் சீக்கிரம் வீட்டை விற்றுவிடலாம். மேலும் சுவர்களுக்கு வண்ணங்கள் அடிப்பது மேலும் சிறப்பு.

சரியான டாக்குமெண்ட்:

பெரும்பாலும் பரம்பரை வீட்டை விற்கையில் சொத்து பிரச்சனை ஏற்படும். அதனால் அவைகளை எல்லாம் சரி செய்து முறையான டாக்குமெண்டுகளை வைத்திருக்க வேண்டும். வீட்டை விற்கும் போது எந்த ஒரு எழுத்துப்பூர்வ பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.