ஜனவரி 14, சென்னை (Festival News): பொங்கல் பண்டிகை (Pongal Festival)தமிழர்களின் மிக முக்கியமான சிறப்புமிக்க பண்டிகையாகும். தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது விவசாயம், தமிழர்களின் கலாச்சாரம், இயற்கை ஆகியவற்றை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். தை மாதத்தின் முதல் நாளில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. நெல், மஞ்சள், கரும்பு போன்ற பயிர்களுக்கு அறுவடைத் திருநாளாகவும், வருடத்தில் நல்ல விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதம் முதல் நாளில் இருந்து கொண்டாடப்படும் நான்கு நாள் திருவிழாவாகும்.
தைப் பொங்கல்:
தைப்பொங்கல் அன்று நாம் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடுகிறோம். அதனால், காலையில் சூரியன் உதயமாகும் முன்பு நாம் குளிக்க வேண்டும். வீட்டில் கிழக்கு திசையை நோக்கி தான் பொங்கல் பானை வைக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் பொங்கல் வைக்கும் பானையில் இஞ்சி கொத்து மற்றும் மஞ்சள் கொத்து மற்றும் திருநீறு பொட்டு வைத்திருக்க வேண்டும். பொங்கல் வைப்பதற்கு முன்பு மறக்காமல் மஞ்சளால் பிள்ளையார் செய்து அதற்கு குங்குமம் பொட்டு வைத்து மாக்கோலம் போட வேண்டும். அடுப்பில் பொங்கல் பொங்கும் போது அனைவரும் 'பொங்கலோ பொங்கல்' என்று சொல்ல வேண்டும். பின்னர், சாமி கும்பிட்டு பொங்கலை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு அன்பை பரிமாறி கொள்ள வேண்டும். தை திருநாள் முதல் நாளில் பொங்கல் வைக்க காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நல்ல நேரம் உள்ளது. இதன் பின்னர், காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை உகந்த நேரமாகும். Jallikattu 2025: உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்.. எங்கே, எப்போது நடைபெறும்? விபரம் உள்ளே.!
தைப்பொங்கல் வாழ்த்து 2025 (Thai Pongal Wishes Tamil 2025):
- தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் அனைவரது மனங்களும் இன்பம் பொங்க… இனிய பொங்கல் வாழ்த்துகள்
2. பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும், தலைகள் நிமிரும், நிலைகள் உயரும், நினைவுகள் நிஜமாகும், கதிரவன் விழிகள் நல்ல விடியலை கொடுக்கும், அவலங்கள் அகலும், இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்
3. கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கை என்றென்றும் தித்திக்கட்டும்… இனிய பொங்கல் வாழ்த்துகள்
4. அன்பு பெருக… மகிழ்ச்சி என்றும் தங்க… செல்வம் நிலைக்க… நோய் நீங்க… முயற்சி பெருக… வெற்றி என்றும் உங்கள் வசமாக… இனிய பொங்கல் வாழ்த்துகள்
6. உறவுகளின் வீட்டில் புன்னகை பொங்க… இனம் புரியா இன்பம் மனதில் பொங்க… நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க… பொங்கட்டும் தைப் பொங்கல்
7. காசுக்கு கரும்பு வாங்கி... அதை கால் பாகமாக உடைத்து... கடவாய் பல்லில் கடித்து... தித்திப்போடு கொண்டாடுவோம்... இந்த பொங்கல் திருநாளை... இனிய பொங்கல் வாழ்த்துகள்
8. உழவனுக்கு ஒரு திருநாளாம்.. உலகம் போற்றும் நன்னாளாம்... சூரியனை வணங்கி விட்டு... சுருக்குப் பையில் காசு எடுத்து தித்திருக்கும் கரும்பு வாங்கி தெவிட்ட தின்னும் திருநாளாம்… அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்