ஜனவரி 13, சென்னை (Festival News): “பழையன கழிதலும்,புதியன புகுதலும்” என்று போகிப்பண்டிகை அழைப்பார்கள். அப்படி பழையப் பொருட்களை சுத்தம் செய்து வீடுகளுக்கு வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் பொங்கல் பண்டிகையை (Pongal Festival) கொண்டாடுகிறோம். இது விவசாயம், தமிழர்களின் கலாச்சாரம், இயற்கை ஆகியவற்றை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். நெல், மஞ்சள், கரும்பு போன்ற பயிர்களுக்கு அறுவடைத் திருநாளாகவும், வருடத்தில் நல்ல விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதம் முதல் நாளில் இருந்து கொண்டாடப்படும் நான்கு நாள் திருவிழாவாகும். தை மாதத்தின் முதல் நாளில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் மறுநாள், மாட்டுப் பொங்கல் (Mattu Pongal) கொண்டாடப்படுகிறது. இறுதி நாள், காணும் பொங்கல் (Kaanum Pongal) கொண்டாடப்படும்.
மாட்டுப் பொங்கல் (Mattu Pongal):
ஆண்டு முழுவதும் உழவுத் தொழிலுக்கு உற்ற நண்பனாக உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தை இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது பட்டி பொங்கல் அல்லது கன்று பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பசுக்களில் எல்லா தேவர்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே மாட்டுப் பொங்கல் என்று பசுக்கள் இணை இறைவனாக நம்பி வழிபட்டு பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். Mattu Pongal 2025: "உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள்" - இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.!
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்:
மாட்டுப் பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. காலை 9.30 முதல் 10.30 வரை மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக பொங்கல் வைப்பத நல்ல நேரம் பார்த்து தான் வைக்க வேண்டும். ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும். மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை நன்கு குளிப்பாட்டி மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் அணிவித்து அலங்கரிப்பர். மேலும் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணமும் பூசுவர். தொடர்ந்து வீட்டில் உள்ள உழவு கருவிகளை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைப்பார்கள். பின்னர் தாம்பல தட்டுகளில் காடுகளில் விளைந்த பயிர், தேங்காய், பூ, பழம், நாட்டுச்சர்க்கரை எல்லாம் வைத்து பூஜை செய்வர். மாட்டு தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல் வழங்குவர்.
ஜல்லிக்கட்டு (Jallikattu):
மாட்டுப் பொங்கலின் சிறப்பை ஜல்லிக்கட்டு தான். அதனை மஞ்சுவிரட்டு என்றும் அழைப்பர். மாட்டுப் பொங்கல் என்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகவும் உற்சாகமாக நடைபெறும். இதில் பல இளைஞர்கள் கலந்து கொள்வர். குறிப்பாக மதுரையில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு இவ்விடங்களில் வெகு விமரிசையாக ஜல்லிக்கட்டு நடைபெறும். வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கூட இங்கு காண பலர் வருவர். ஜல்லிக்கட்டு விளையாட்டில் வாடி வாசலில் இருந்து சீறிக்கொண்டு பாய்ந்து ஓடிவரும் காளை மாடுகளை அடக்கி வெற்றி பெறும் வீரர்களுக்கு பெரிய பரிசு கொடுக்கப்படும். யாராலும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைக்கும் பரிசுகள் கிடைக்கும். Pongal Kolam 2025: பொங்கலுக்கு இப்படி கோலங்களை போடுங்க.. ஏரியாவே வாய்ப்பிளக்கும்.!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு (Avaniyapuram Jallikattu): நாளை மதுரை மாநகர் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்து இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 2026 காளை உரிமையாளர்களும் 1735 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் பதிவு செய்துள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு (Palamedu Jallikattu): பாலமேடு ஜல்லிக்கட்டு 15-ம் தேதி நடைபெறுகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 4820 காளை உரிமையாளர்களும் 1914 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் முன்பதிவு செய்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு (Alanganallur Jallikattu): உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 16-ம் தேதி நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 5 ஆயிரத்து 786 காளை உரிமையாளர்களும் 1698 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் முன்பதிவு செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளுக்கும் 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ZEE5 தளத்தில், ஜல்லிகட்டு முழு நிகழ்வையும் நேரலையில் மக்கள் காண முடியும் என்று அறிவித்துள்ளனர்.