ASTRO (Photo Credit: Pixabay)

டிசம்பர் 05, சென்னை (Astrology Tips): சிம்ம ராசியில் இருக்கும் பூரம் (Pooram) நட்சத்திரக்காரர்களே, இதுவரை ஒரு சோதனையான காலகட்டத்தையே அனுபவித்து வந்திருப்பீர்கள். 2024 உங்களுக்கு அவ்வளவு விசேஷமாக இருந்திருக்காது. கணவன் மனைவி பிரிவு, சண்டை சச்சரவு, கருத்து வேறுபாடுகள், நண்பர்களிடையே பிரச்சனை, நண்பர்களால் தொல்லை, தொழிலில் நஷ்டம், வேலை இழப்பு, எதிர்பார்த்த அளவு லாபமின்மை, உடல் நல குறைவு, கடன் நெருக்கடி, பண பிரச்சனை, வம்பு வழக்குகள் போன்ற பல பிரச்சனைகளை அனுபவித்து வந்திருப்பீர்கள். இந்த நிலை உங்களுக்கு வரும் மார்ச் மாதம் வரை நடைபெறும். இருப்பினும் பிற கிரகங்களின் துணையோடு அதை எல்லாம் சமாளித்து விடுவீர்கள். இதுவரை இருந்த பண நெருக்கடி கண்டிப்பாக தீரும். புதிய கடன் கிடைக்கும். அதன் மூலம் பண நெருக்கடியை சமாளிப்பீர்கள்.

எந்த ஒரு செயலையும் கடுமையான போராட்டத்திற்கு பிறகு முடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. ஒரு சாதாரண விஷயத்திற்கு கூட ஒருவரை பார்க்க வேண்டும் என்றால் அவரை நான்கு ஐந்து முறை அலைந்து தான் பார்க்க முடியும். பல இழுபறிக்கு பின்னர்தான் அந்த காரியம் நிறைவேறும். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இல்லையென்றால் மதிப்பெண் கண்டிப்பாக குறையும். நீங்கள் படித்த கேள்வியை தவிர மற்ற கேள்விகள் எல்லாம் வரும். அரசு அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லை என்றால் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். சுயதொழில் செய்பவர்களுக்கு தொழிலில் போட்டி, தொழில் மந்தம், உடல் அசதி, வரவேண்டிய பணங்கள் இழுபறி நிலைமை போன்ற கெடு பலன்கள் நடந்து வரும். ஷேர் மார்க்கெட்டில் இன்னும் ஆறு மாதத்திற்கு ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். Astrology: 2025 ஆம் ஆண்டு மகம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

இதுவரை தடைபட்டிருந்த ஆன்மீக காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். இதுவரை கோவிலுக்கு கூட செல்ல முடியாமல் இருந்தவர்கள் அல்லது புனித பயணத்திற்கு தடையாக இருந்தவை எல்லாம் இனி நல்ல முறையில் நிறைவேறும். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்லலாம். கடன் கொடுக்கல், வாங்கலில் இழுபறிநிலை நீடிக்கும். வாகனங்கள் வகையில் செலவினங்கள் ஏற்படும். சாலைகளில் செல்லும்போது தவறாமல் ஹெல்மெட் அணிந்து செல்லவும். பைன் போடக்கூடிய நேரம் இது. இதுவரை ஃபைன் போடப்பட்டு இருக்கலாம் உங்களுக்கு. கலைத்துறையினருக்கு இது ஒரு சோதனையான ஆண்டு. உங்கள் ஜாதகரீதியாக திசை புத்திகள் வலிமையாக இருந்தால் இந்த கெடு பலன்கள் ஓரளவு குறைந்து இருக்கும்.

ஜாதகத்தில் திசை புத்திகள் சரியில்லை என்றால் இந்த ஆண்டு உங்களுக்கு சுமாரானதாகத்தான் இருக்கும். 2025 மார்ச் மாதத்திற்கு மேல் சிறப்பான நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள். சரியான நேரத்தில் சரியாக சாப்பிட முடியாமல் இருக்கலாம். தூக்கம் வருவது கூட 12 மணிக்கு மேல் இரண்டு மணிக்கு மேல் தான் தூக்கமே வரும். 2025 மார்ச் மாதம் வரை பெண்களிடம், கூட்டாளிகளிடம், நண்பர்களிடம், மனைவியிடம் வார்த்தையில், பேச்சுக்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்குப்பின் அனைத்துமே உங்களுக்கு நன்மையாக மாறும். 2025 மார்ச் மாதத்திற்கு மேல் உங்களுக்கு நல்ல ஒரு யோகமான ஆண்டு என்று சொல்லலாம். புதிய வண்டி, வாகனங்கள் வாங்குவீர்கள். தொழில் ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும், வேலையில்லாதவர்களுக்கு சித்திரை மாதத்திற்கு மேல் வேலை கிடைக்கும்.திருமண வயதினருக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும். கடன்கள் அடைபடும், அதே நேரத்தில் புதிய கடன்கள் வாங்கவும் நேரிடும்.

பரிகாரம்: தற்போது நீங்கள் குச்சனூர் சென்று வருவது உங்கள் மன குறைகளை போக்கும். வாரம்தோறும் நவக்கிரக சனிக்கு அர்ச்சனை செய்து வரவும். சிவ வழிபாடு சிறப்பான வாழ்வு தரும்.

மார்ச் வரை உங்கள் மதிப்பெண் 50. மார்ச் மேல் உங்கள் மதிப்பெண் 80.

இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.