ASTRO (Photo Credit: Pixabay)

டிசம்பர் 03, சென்னை (Astrology Tips): கடக ராசியில் இருக்கும் பூசம் (Poosam) நட்சத்திரக்காரர்களே, உங்களை மற்ற ஜோதிடர்கள் இதுவரை நன்றாக பயமுறுத்தி இருப்பார்கள். அஷ்டம சனியில் நீங்கள் படாதபாடு படுவீர்கள், பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்று கூறி இருப்பார்கள். ஆனால் சென்ற ஆண்டுதான் நீங்கள் தொழில் ரீதியாக, குடும்ப ரீதியாக மிகவும் மகிழ்ச்சியோடும் வெற்றிகரமாகவும் இருந்திருப்பீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் கூட தேடி வந்திருக்கும். தொழிலில் முன்னேற்றம், வெளிநாடு செல்லுதல், புதிய வேலை வாய்ப்பு,புனித யாத்திரை, புதிய வண்டி வாகனம் வாங்கி இருப்பீர்கள். வீட்டு வகையில் முன்னேற்றம் நடந்திருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைத்திருக்கும்.

சொத்துக்கள் பரிமாற்றம் போன்ற நல்ல விஷயங்கள் இந்த 2024 இல் நடந்திருக்கும். அஷ்டமச்சனி என்று பயந்து கொண்டிருந்த உங்களுக்கு இது நல்ல அதிர்ஷ்ட சனியாக இருந்ததே என்று ஆச்சரியப்பட்டு கொண்டு இருப்பீர்கள். ஆனால் உண்மையில் அஷ்டம சனியின் தீய பலன்கள் வரும் பங்குனி மாதம் முதல் தான் ஆரம்பிக்க இருக்கிறது. பெரிய அளவில் நன்மையோ, தீமையோ இல்லை என்று தான் கூறவேண்டும். இந்த யோகமான அமைப்பு வரும் மார்ச் மாதம் வரை நடைபெறும். அதற்குப் பிறகு மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். உடல் நலனில் கவனம் தேவை. போக்குவரத்தில் கவனம் தேவை. வீண் விரைய செலவுகள் ஏற்படும். அனாவசியமாக யாரிடமும் எந்த கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள கூடாது. Astrology: 2025 ஆம் ஆண்டு ஆயில்யம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

நண்பர்கள் தானே என்று உண்மையை சொல்லி விடாதீர்கள். சில விஷயங்களை மனதிற்குள்ளே ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நண்பர்களால் பிரச்சனை, நண்பர்களுக்குள் மனக்கசப்பு கண்டிப்பாக ஏற்படும். தொழிலில் லாபம் குறையலாம். தனியாரில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படலாம்.

தற்போது புதிதாக பண நெருக்கடி ஏற்படலாம். புதிதாக கடன் வாங்கும் சூழ்நிலை நேரிடலாம். உடல் அசதி, சோர்வு, காரிய தடைகள் எந்த ஒரு காரியமும் நீண்ட இழுபறிக்கு பிறகு நிறைவேறக்கூடிய சூழ்நிலை இப்போதே ஆரம்பித்துவிட்டது. வரவேண்டிய பணம் காலதாமதம் ஆகி நீண்ட இழுபறிக்கு பின்னரே வரும். ஷேர் மார்க்கெட்டில் இப்போது இருந்தே ஈடுபட வேண்டாம். ஓராண்டிற்கு கண்டிப்பாக நஷ்டம் தான் வரும்.

ஜாதகம் சரியில்லாதவர்கள், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கேசு என படி ஏற வேண்டிய சூழ்நிலைகளும் இருக்கிறது. போக்குவரத்தில் கவனமாக இருங்கள் சிறிய விபத்துக்கள், காயங்கள் ஏற்படலாம். எவருடனும் எதற்காகவும் அனாவசியமாக விவாதம் செய்யாதீர்கள். உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் வீண் பிரச்சனைகளை கொண்டு வரும். ஓராண்டிற்கு அமைதியாக இருப்பது உங்களுக்கு நல்லது. நீங்கள் வாய்ப்பு இருந்தால் திருநள்ளாறு சென்று வருவது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது எல்லாம் கோயிலுக்கு சென்று வாருங்கள். அதுவும் நீங்கள் முயற்சி எடுத்து கண்டிப்பாக போய் ஆக வேண்டும் என்று உறுதியோடு இருந்தால் மட்டுமே கோயிலுக்கு போக முடியும். இல்லையென்றால் கோயிலுக்கு செல்வதற்கு கூட உங்கள் மனமும் உடலும் ஒத்துழைக்காது. உங்கள் ஜாதக ரீதியாக திசை புத்திகள் நன்றாக இருந்தால் ஓரளவு சமாளித்து வரலாம். ஜாதகத்தில் திசை புத்திகள் சரியில்லை என்றால் வரும் சித்திரை மாதம் முதல் மிகவும் சிரமமே.

பரிகாரம்: அம்மன் வழிபாடு உங்களுக்கு ஆறுதலை தரும். ஏழுமலையான் வழிபாடு உங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தை தரும். உங்களால் ஆன உதவிகளை, தான தர்மங்களை, அர்ச்சனை, பரிகாரங்களை செய்து வாருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயிலுக்கு சென்று வாருங்கள். கோளறு பதிகம் படித்து வாருங்கள். நிச்சயமாக வரக்கூடிய ஆண்டையும் வெற்றிகரமாக கடந்து விடுவீர்கள்.

உங்கள் மதிப்பெண் 50.

இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.