நவம்பர் 06, சென்னை (Festival News): முருக பக்தர்களுக்கு இந்த சஷ்டி விரதம் ஆனது மிகப்பெரிய திருவிழா கொண்டாட்டம். சஷ்டி விரத நாட்கள் வந்து விட்டாலே, அவர்கள் வழக்கத்தை விட முருகப்பெருமானை இன்னும் மனநிறையோடு சந்தோஷமாக வழிபாடு செய்ய துவங்கி விடுவார்கள். ஆனால் எல்லா முருக பக்தர்களாலும் இந்த 6 நாட்களும் விரதத்தை மேற்கொள்ள முடியாது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி சூழ்நிலை இருக்கும். நான் விரதம் இல்லையே, முருகப்பெருமான் எனக்கு அருள் புரிய மாட்டாரா என்றெல்லாம் கவலை கொள்ள வேண்டாம். முருகனை உண்மையான பக்தியோடு உள்ளம் உருகி ஒரு சொட்டு கண்ணீருடன், எவர் ஒருவர் வழிபாடு செய்கின்றார்களோ, அவர்களுக்கு முருகனின் அருள் நிச்சயம் இருக்கும்.
சரி, இருந்தாலும் மனநிறைவு என்பது நாம் செய்யக்கூடிய ஒரு சில பரிகாரத்தின் மூலமாகத்தான் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் நான் விரதம் இல்லை, இருந்தாலும் முருகப்பெருமானுக்கு இந்த ஒரு பொருளை தானமாக வாங்கி கொடுத்து விட்டேன், என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்லும் அளவுக்கு ஒரு திருப்தி தரக்கூடிய அற்புதமான பரிகாரத்தை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். Nov 6 Special Day: போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழல் சுரண்டலைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் இன்று..!
முருகன் கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்:
சூரசம்காரம் முடிவதற்குள் அதாவது, அக்டோபர் மாதம் 7ஆம் தேதி வியாழக்கிழமைக்குள், இந்த பொருளை வாங்கி நீங்கள் முருகன் கோவிலுக்கு தானமாக கொடுக்கலாம். அது என்ன பொருள் தெரியுமா. சுத்தமான நல்லெண்ணெய், சுத்தமான நெய். முருகப்பெருமானுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதற்கு நல்லெண்ணெய், இந்த சஷ்டி விரத நாட்களில் முருகப்பெருமானுக்கு பலவகையான பிரசாதங்கள் செய்வார்கள். அதற்கு பயன்படுத்துவதற்கு நெய் இந்த இரண்டு பொருளையும் உங்களால் முடிந்தவரை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும்.
நல்லெண்ணெய் நெய் இது இரண்டும் மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற பொருட்களை வாங்கி தானம் கொடுக்கக் கூடாது. நல்லெண்ணெய் நெய் அளவு குறைவாக வாங்கினாலும் அது தரமானதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு இந்த தானத்தை செய்யுங்கள் போதும்.
இதோடு ஒரு முதியோர் இல்லத்துக்கோ அல்லது குழந்தைகள் ஆசிரமத்திற்கோ, உங்களால் முடிந்த நெய் வாங்கி தானமாக கொடுக்கலாம். இது சுத்தமான நெய், இதை நீங்கள் சாப்பிட பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லி நெய் தானம் கொடுங்கள். ஒரு லிட்டர் நெய் வாங்கி கொடுத்தால் கூட சிறப்பு. அந்தக் குழந்தைகள், சாதத்தில் அந்த நெய்யை போட்டு சாப்பிடும்போது உங்களுடைய கர்மாக்கள் குறையும்.
அதேபோல துவரம் பருப்பு தானம் கொடுக்கலாம். வசதி இல்லாதவர்களுக்கு, ஆசிரமம் நடத்துபவர்களுக்கு, முதியோர் இல்லம் நடத்துபவர்களுக்கு உங்களால் இயன்ற அளவு துவரம் பருப்பை வாங்கி தானம் கொடுத்தால் உங்களுடைய கடன் சுவையானது படிப்படியாக குறையும். அதேபோல வீடு கட்டுவதில் பிரச்சனை, கட்டிய வீடு பாதியிலேயே நிற்கிறது, அல்லது நிலம் வாங்க வேண்டும், நிலம் விற்க வேண்டும், சொந்த வீடு வாங்க வேண்டும்.
இதுபோல பிரச்சனைகளில் நீங்கள் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர இந்த துவரம் பருப்பு தானம் சிறப்பான பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான தானங்களை வரும் வியாழக்கிழமைக்கு முன்பு செய்து விடுங்கள். நீங்கள் விரதமே இல்லை என்றாலும் சரி, விரதம் இருந்த முழு பழனையும், முருகப்பெருமான் உங்களுக்கு கைமேல் பலனாக கொடுத்து விடுவார்.