செப்டம்பர் 27, புதுடெல்லி (Special Day): தேசத் தந்தை மகாத்மா காந்தி (Mahatma Gandhi), 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கும், மக்களின் வாழ்க்கைக்கான தத்துவங்களுக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்த, மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அவரது 155வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி என்று அன்போடு அழைக்கப்படும் இவர், இந்தியாவை சுதந்திரத்திற்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சுதந்திரத்திற்கான இயக்கங்களை ஊக்கப்படுத்தினார். அகிம்சை முறையில் போராடிய இவர், 1948 ஜனவரி 30 அன்று இந்துதேசியவாதத்தை சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டாலும், இன்றும் மக்கள் மத்தியில் மகாத்மாவாக நினைவில் உள்ளார். Mahalaya Amavasya 2024: மகாளய அமாவாசை 2024 வழிபாட்டு முறைகள் என்னென்ன? 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம் என்ன?!
மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்:
- கூட்டத்தில் நிற்பது எளிதானது ஆனால் தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும்.
- மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல, மாறாக நம்மை நாமே மாற்றிக்கொள்வது.
- நேற்றைய தோல்விகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், இன்றைய வெற்றிகள் குறைவாகவே இருக்கும். நிகழ்காலத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும்.
- நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், உங்களிலிருந்து தொடங்குங்கள்.
- உங்கள் செயல்களினால் வரும் விளைவுகள் என்னவென்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் எதுவும் செய்யாவிட்டால், எந்த விளைவும் இருக்காது.
- எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவையில்லை.
- நான் யாரையும் அவர்களின் அழுக்கு கால்களால் என் மனதில் நடக்க விடமாட்டேன்.
- உயர்ந்த எண்ணங்களைய உடையவர் ஒருநாளும் தனித்தவராகார்.
- எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.
- நீங்கள் என்னை சங்கிலியால் பிணைக்கலாம், நீங்கள் என்னை சித்திரவதை செய்யலாம், நீங்கள் இந்த உடலை கூட அழிக்கலாம், ஆனால் உங்களால் ஒருபோதும் என் மனதை சிறைப்படுத்த முடியாது.
- மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை இழக்காதீர்கள். மனிதநேயம் என்பது ஒரு கடல், கடலின் சில துளிகள் அழுக்காக இருப்பதால், கடல் அழுக்காகாது.
- மனிதகுலத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் அமைதி.
- கோபம் அகிம்சையின் எதிரி, அகங்காரம் அதை விழுங்கும் ஒரு அரக்கன்.
- நீங்கள் ஒரு எதிரியை எதிர்கொள்ளும் போதெல்லாம். அவரை அன்பால் வெல்லுங்கள்.
- கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.
- மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.
- உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.