டிசம்பர் 31, சென்னை (Festival News): உலகம் முழுக்க இருக்கும் நேர வித்தியாசத்தால் புத்தாண்டு வெவ்வேறு நேரத்தில் பிறப்பதை போல ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பாரம்பரிய பழக்கங்கள் இந்த புத்தாண்டு (New Year) ஜனவரி 1 ஆம் தினத்தன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது பொதுவாக எல்லா நாட்டிலும் கடைபிடிக்கப்படும் ஒன்றுதான். நள்ளிரவில் வானவேடிக்கைகளை நிகழ்த்தி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து சொல்வது வழக்கம்.
வரலாறு:
2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில், ஆண்டுக்கு 10 மாதங்கள்தான் இருந்தது. மார்ச் மாதம் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. இயேசுவின் தாய் மேரி கர்ப்பமுற்ற தேதி என்பதால் இந்த நாளை புத்தாண்டு தினமாக அனுசரித்தனர். பின் ரோமானிய மன்னர்களில் ஒருவரான, நுமா போம்பிலியஸ் என்பவர், கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றாக்கினார். முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர்கள் வைத்தனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. Pregnancy Symptoms: பெண்களே தவிர்க்காம படியுங்க! இதெல்லாம் தான் கர்ப்பகால அறிகுறிகள்.. விபரம் உள்ளே.!
இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள், இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறினர். மேலும் டிசம்பர் 25 ஆம் தேதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக, 1500 ஆம் ஆண்டு வரை, ஆண்டின் முதல் தேதியில் பல குழப்பங்கள் நிலவியது. கி.பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். இதனையடுத்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது. கிரிகோரியன் காலண்டர் முறைப்படி, ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 நிர்ணயிக்கப்பட்டது. அதன் முதல் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினமாக உலக மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், புத்தாண்டு பண்டிகை கொண்டாடும் விதமாக புத்தாண்டு வாழ்த்து (Christmas Wishes) செய்திகள் லேட்டஸ்ட்லி தமிழ் சார்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய தொடக்கங்கள், இனிய நினைவுகள், மற்றும் பெரும் சாதனைகளால் நிரம்பிய ஆண்டாக 2025 அமையட்டும்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உங்கள் கனவுகள் எல்லாம் நிறைவேறி, வளமை, அமைதி, மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ 2025 ஆண்டு வழி வகுக்கட்டும்!
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கைகள் மற்றும் வெற்றிகளை கொண்டு வரட்டும்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புதிய சவால்களை வென்று, வெற்றியின் உச்சியை தொட்ட ஆண்டாக 2025 அமைய வாழ்த்துகிறேன்!
அனைத்து கனவுகளும் நனவாகி, உங்கள் வாழ்வில் புது அத்தியாயங்களை தொடங்க வாழ்த்துகிறேன்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!