டிசம்பர் 31, சென்னை (Health Tips): பலர் எதிர்பாராத நேரத்தில் கர்ப்பம் தரிப்பர். ஆனால் அதை ஆரம்பத்திலேயே கண்டரியாமல் இருப்பர். கருத்தரிக்கும் ஆரம்பகாலத்தில் சில அறிகுறிகள் தோன்றும். இதை வைத்து அறிந்து கொண்டு சரியான மருத்துவ வழிமுறையை பின்பற்றலாம். குழந்தை வேண்டும் என்றோ அல்லது தற்காலிகமாக வேண்டாம் என்றோ, நினைப்பவர்கள் கர்ப்பம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளவது நல்லது. ஒரு சில அறிகுறிகள் அனைவருக்கும் பொதுவாக தோன்றும். இதையறிந்து பிரெக்னன்சி டெஸ்ட் செய்து பார்க்கலாம். முன்கூட்டியே கர்ப்பம் தரித்திருப்பதை (Early Pregnancy Symptoms) அறிந்து கொண்டால், தாய் சேய் உடல் நலனை பாதுக்காக்கலாம்.
தவறும் மாதவிடாய்:
மாதவிடாய் நிகழ்வதற்கு 12 -14 நாட்களுக்கு முன்பு உடலுறவு வைத்திருந்து மாதவிடாய் சரியான நேரத்தில் வரவில்லை எனில் கர்ப்பம் தரித்திருப்பதற்கு வாய்ப்புள்ளது. பொதுவாக மாதத்தில் 28 நாட்களில், 5-6 நாட்கள் கர்ப்பம் ஆவதற்கான வாய்ப்புள்ளது. வழக்கமாக ஏற்படும் மாதவிடாய் அதன் நேரத்தில் வராமல் இருந்தால், மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகுவது சிறந்தது. Ponnaganni Keerai Benefits: பொன்னாங்கண்ணி கீரையின் அசத்தல் நன்மைகள்; உடனே வாங்கி சாப்பிடுங்க.!
வீக்கம்:
கற்பமாக இருக்கும்பொழுது உடலிற்கு அதிகமான சத்துக்கள் தேவைப்படும். மேலும் அதிகமான புரெஜெஸ்டிராடிரான் சுரப்பதால் செரிமாணத்தில் சிக்கல் ஏற்படும். இதனால் வயிறு சற்று வீக்கமாக காணப்படும். மேலும் ஃபுல்லான உணர்வையும் தரும். மாதவிடாய் நாட்கள் தவறும் போது இது போன்று காணப்பட்டால் கற்பமாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
சிறுநீர் வெளியேற்றம்:
வயிற்றில் சிசு உருவாவதல் சிறுநீர் பையில் அழுத்தம் ஏற்படும் இதனால் அதிகமாக சிறுநீர் வெளியேற்ற வேண்டிய உணர்வு ஏற்படும். கருப்பை வளர்வதால் ரத்தவேட்டம் அதிகரிக்கும் இதனால் சிறுநீர் வெலியேற்றம் அடிக்கடி நிகழும். இது ஆரம்பத்திலிருந்து ஏற்படும் அறிகுறியாகும்.
மனமாற்றங்கள்:
கர்ப்பமாகியிருந்தால் அதிகமாக மனமாற்றங்கள் நிகழும். கர்ப காலத்தில் இயற்கையாகவே ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கும். இதனால் அடிக்கடி மனமாற்றங்கள் நிகழும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மூட்ஸ்விங்ஸ் போலவே இப்போதும் நடைபெறும். மதவிடாய் அல்லாத நாட்களிலும் இது போன்ற உணர்வு ஏற்படுமாயின் கருவுற்றிருக்கலாம் என்று அர்த்தம்.
மார்பக வீக்கம்:
கரு தரித்திருந்தால், முதல் 2 வாரத்திற்கு பின்னர் மார்பகத்தில் ஒரு சில மாற்றங்கள் காண முடியும். ஹார்மோன் மாற்றங்கள், மார்பகங்களில் வெண்மை நிற புண்கள் ஏற்படுத்தும். சிலருக்கும் அழகாவும், அதிக எடை இருப்பது போன்றும் தோன்றும். கரு உருவதால் தேவைப்படும் அதிக ரத்தவோட்டத்தினால் இவைகள் தோன்றலாம். Smoking Alert: "இனி ஆச்சும் திருந்துங்க பாஸ்" சிகரெட் பிடிப்பதால் குறையும் ஆயுள்.. வெளியான ஆய்வுத் தகவல்..!
ரத்தக்கசிவு:
இது பெண்ணுறுப்பிலிருந்து மெல்லிய ரத்த கசிவை ஏற்படுத்துவது கரு தரித்திருப்பதற்கான அறிகுறியாகும். கருமுட்டை கருப்பையின் உட்புறத்தில் சேரும் போது இந்நிகழுவு ஏற்படும். இந்த அறிகுறி பல பெண்களுக்கு ஏற்படும். ஒரு சிலருக்கு மட்டும் அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்படும்.
மார்னிங் சிக்னஸ்:
இந்த மார்னிங் சிக்னஸ் எனப்படும் அறிகுறி அனைத்து பெண்களுக்குமே நிகழும். காலை நேரத்தில் வாந்தி அல்லது குமட்டல் மட்டும் ஏற்படும். இது கருவுற்ற ஆரம்ப சில மாதங்களுக்கு ஏற்படும். ஒரு சிலருக்கு உணவு உண்ணும் போது குமட்டல் உணர்வு ஏற்படும். தலை சுற்றலும், இதய்த்துடிப்பு அதிகரித்தலும் ஏற்படும். இது மருத்துவரை அணுக வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.
அதிக பசியெடுத்தல்:
கருவுற்றிருக்கும் பெண்களுக்கு அதிகளவில் பசி எடுத்துக் கொண்டே இருக்கும். சில உணவுகளை தவிற பிடித்தம் மற்றும் சட்த்னா உனவுகளை சாப்பிடுவது நல்லது. மேலும் சுவைகலிலும் மற்றம்ஙக்ள் நிகழும். வித்தியாசமான உனவுகளின் சுவைகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றும்.
பிற அறிகுறிகள்:
உடல் எடை வேகமாக அதிகரிக்கும், சோர்வான உணர்வு ஏற்படும். அடிக்கடி காய்ச்ச்சல், மற்றும் உஅல் வெப்ப நிலையில் மாற்றம் நிகழ்வது, தலைவலி, மயக்க உணர்வு, சுவை உணர்வின்மை, தசை வலி, நெஞ்செரிசல், போன்றவையும் சருமத்தில் தழும்புகள், கரும்புள்ளிகள் ஆகியவை ஏற்படும்.