அக்டோபர் 11, சென்னை (Special Day): உலகம் முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வூட்டும் வகையில், அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தை தினம் (International Day of the Girl Child) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சமூகத்தின் சரி பாதியான பெண்களை அடுத்த கட்டத்திற்கு கைதூக்கி விடுங்க என கேட்கவில்லை. முன் திசை நோக்கி முன்னேற தோழமையோடு கரம் பற்றுங்கள் என்பதே ஒட்டு மொத்த பெண் இனத்தின் எதிர்பார்ப்பு.
வரலாறு: 1995ஆம் ஆண்டு பெய்ஜிங் மாநாட்டில், முதல் முறையாக சர்வதேச அளவில் பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனை நிறைவேற்றும் வகையில், 2011ஆம் ஆண்டு, ஐக்கிய நாடு பொது சபை சார்பில், அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. Saraswati Puja 2024: சரஸ்வதி பூஜை 2024.. கல்வியில் சிறக்க சரஸ்வதியோட இந்த மந்திரங்களை சொல்லுங்க.!
விழிப்புணர்வு: இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களும் பெண் குழந்தைகளுக்கு எதிராக உள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் குழந்தைகள் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள் என்று மெட்டா புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இதனால் சைபர் கிரைம் குறித்து மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் (good Touch), கெட்ட தொடுதல் (bad Touch) கற்பிப்பதை போன்று, ஆண் குழந்தைகளுக்கு Don't Touch என்று கற்பித்தல் வேண்டும்.