ஜூன் 24, புதுடெல்லி (New Delhi): ஜூன் 24 தேதி உலகெங்கிலும் பல கிறிஸ்தவ சமூகங்களில் தேவதை தினம் (International Fairy Day) என கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாள் ஞானஸ்நானர் யோவான் பிறந்த நாளாக கருதப்படுகிறது.
வரலாறு: இயேசு கிறிஸ்துவின் முன்னோடியாக கருதப்படும் ஞானஸ்நானர் யோவான் யூதர்களின் கடைசி தீர்க்கதரிசிகளில் ஒருவர். யோவான் யோர்தான் நதியில் மக்களை திருமுழுக்கு செய்து, பாவ மன்னிப்பைப் பெற அவர்களை அழைத்தார். இயேசு கிறிஸ்துவையும் திருமுழுக்கு செய்தவர் இவரே. யோவான் தைரியமானவர் மற்றும் உண்மையுள்ளவர். அரசரின் தவறான செயல்களை எதிர்த்து குரல் கொடுத்தார். இதனால் சிறையில் அடைக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டார். How to Travel Cheaper: உள்ளூர்-வெளியூர் சுற்றுலாவும் போகணும், பணமும் கம்மியா செலவாகனும் என ஆசையா?... உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
தேவதை தினத்தின் முக்கியத்துவம்: நல்லொழுக்கம் மற்றும் நீதியின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாக தேவதை தினம் கருதப்படுகிறது. மேலும் தேவையுள்ளவர்களுக்கு உதவுவதன் மூலம் நாம் தேவதூதர்களாக இருக்க முடியும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அதுமட்டுமின்றி இந்த நாள் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து மக்களுக்கும் ஒரு முக்கியமான நாளாகும். நாம் அனைவரும் ஞானஸ்நானர் யோவான் போல நல்லொழுக்கம் மற்றும் நீதியுடன் வாழ முயற்சி செய்ய வேண்டும்.