Left-Handers Day (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 13, புதுடெல்லி (New Delhi): சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் (International Left-Handers Day) 1976ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இடது கை பழக்கம் என்பது பிறக்கும்போதே ஒருவருக்கு இருக்கும் ஒரு இயல்பான குணம். பெரும்பாலான மக்கள் வலது கையைப் பயன்படுத்தினாலும், சிலர் இடது கையை அதிகம் பயன்படுத்துவார்கள். இது ஒருவருடைய மூளை அமைப்பைப் பொறுத்து இருக்கும்.

இடது கை பழக்கம்: இடது கை பழக்கமுள்ளவர்களின் மூளை அமைப்பு, வலது கை பழக்கமுள்ளவர்களை விட சற்று வித்தியாசமாக இருக்கும். இடது கை பழக்கம் மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் நோக்கும்போது மொத்த ஜனத்தொகையில் 7-10 சதவீதத்தினரே இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. Is It The 77th Or 78th Independence Day?: இந்தியாவின் 2024 சுதந்திர தின விழா 77ம் ஆண்டா? 78 ஆ?? விபரம் இதோ..!

இடது கை பழக்கத்தின் சிறப்புகள்: இடது கை பழக்கமுள்ளவர்கள் தனித்துவமானவர்கள். இவர்கள் பொதுவாக படைப்புத் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு விமர்சன சிந்தனை அதிகமாக இருக்கும். பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்யும் திறன் அதிகமாக இருக்கும். தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.