Kanda Sashti (Photo Credit: LatestLY)

நவம்பர் 05, சென்னை (Festival News): முருகருக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது இந்த சஷ்டி விரதம் (Kanda Shashti Vratam) தான். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மாதத்தில் வரக்கூடிய சஷ்டி விரதம் .இதை சஷ்டி திரி துவங்கும் நேரம் முதல் சஷ்டி திதி முடியும் நேரம் வரை விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்வார்கள. இதில் தீபாவளி தொடர்ந்து வரக்கூடிய சஷ்டி திதியை தான் மகா கந்த சஷ்டி விரதம் என்று சொல்வார்கள். இந்த விரதத்தை இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானூர் கடைப்பிடித்து வருகிறார்கள். ஆனால் இதை யார் கடைபிடிக்க வேண்டும்? எப்படி கடைபிடிக்க வேண்டும்? என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது. அதைப் பற்றிய சில தகவல்களை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மகா கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை:

முதலில் இந்த சஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த சஷ்டி விரதமானது பல வழிமுறைகளில் இருக்கலாம். அதாவது நாள் முழுவதும் தண்ணீர் மட்டும் அருந்தி விட்டு இருக்கலாம். அடுத்து பால், பழ விரதம் அதாவது பால் பழம் இரண்டை மட்டும் நாள் முழுவதும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். மூன்றாவதாக இளநீர் விரதம். இளநீரைத் தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள். இதில் இன்னொரு முறை ஒரே ஒரு வேலை மட்டும் உணவு அருந்தி விட்டு விரதம் இருப்பார்கள். முருகருக்கு வைக்கும் நெய்வேத்தியத்தை மட்டும் உண்டும் விரதம் இருக்கலாம். World Tsunami Awareness Day 2024: உலக சுனாமி விழிப்புணர்வு தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!

இவை அனைத்திலும் விட கடுமையான முறை ஒன்று உள்ளது. அது தான் மிளகு விரதம் இருக்கும் விரதங்களில் இது தான் மிகவும் கடுமையானதாக சொல்லப்படுகிறது. முதலாம் நாள் விரதம் துவங்கும் நாள் ஒரு மிளகும் இரண்டாம் நாள் இரண்டு மிளகு மூன்றாம் நாள் மூன்று மிளகு என ஆறு நாட்களும் ஒவ்வொரு மிளகாக அதிகரித்து ஆறாவது நாள் ஆறு மிளகு மட்டும் சாப்பிடும் வழிபாடு உள்ளது. முருகனை வழிபாடு செய்ய எத்தனை வழிமுறைகள் இருந்தாலும் இது அவரவரின் உடல் நிலையை பொறுத்து தான் இந்த விரத முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இதில் எந்த விரதங்களை மேற்கொண்டாலும் தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும் தண்ணீர் குடிக்காமல் எந்த விரதத்தையும் கடைபிடிப்பது நல்லதல்ல. அதே போல் இந்த விரதத்தை உடல் நலம் இல்லாதவர்கள் தொடர்ந்து மருந்து மாத்திரை உண்பவர்கள் இருப்பதை தவிர்ப்பது நல்லது மேலும் கர்பிணி பெண்கள், வயதானவர் இந்த விரதத்தை தவிர்த்து விட்டு முருகனை மனதார நினைத்து வழிபாடு செய்வது நல்லது.

இந்த விரதம் இருக்கும் பொழுது நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்று மனதை ஒருநிலைப்படுத்தி முருகனை மட்டும் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த விரத நாட்களில் நாம் யார் மீதும் கோபம் கொள்ளக் கூடாது. வீண் விவாதங்கள் சண்டை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இந்த கந்த சஷ்டி விரதம் ஆறாவது நாள் சூரசம்காரத்துடன். அன்றைய தினத்தில் விரதத்தை முடிப்பவர்களும் உண்டு. சிலர் ஏழாவது நாள் திருக்கல்யாணம் முடிந்த பிறகு விரதத்தை முடிப்பதும் உண்டு. இது அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விரத நாட்களில் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வீட்டின் பூஜையறையில் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி முருகரின் படத்திற்கு முன்பாக அமர்ந்து வழிபாடு செய்யுங்கள். இப்படி ஏற்றும் தெய்வமானது சர்கோண கோலமிட்டு அதில் அகல் விளக்கு ஏற்றுவது சிறந்தது. அந்த நேரத்தில் கண்டிப்பாக முருகரின் மந்திரங்கள், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றை சொல்லுங்கள். இது மிகவும் அவசியம். முருகர் வழிபாட்டின் போது உங்களால் முடிந்த எளிமையான நெய்வேதியத்தை செய்து வைத்து வழிபாடு செய்யுங்கள்.

இந்த விரதத்தை வீட்டில் இருந்து கடைபிடிப்பவர்களும் உண்டு ஒரு சிலர் முருகரின் அறுபடை வீடுகளில் ஏதேனும் ஒன்றில் தங்கி விரதம் இருப்பவர்களும் உண்டு இதுவும் அவரவரின் சூழ்நிலைக்கேற்றவாறு அமைத்துக் கொள்ளுங்கள். இந்த விரத நாட்களில் உங்களால் முடிந்தால் யாரேனும் ஒருவருக்கு தினம் அன்னதானம் செய்யுங்கள் இதை முருகரின் அருளை பரிபூரணமாக பெற உதவும்.

இந்த முறைகளில் உங்கள் உடல்நிலை சூழ்நிலைக்கேற்ப எந்த முறையை கடைபிடிக்க முடியுமோ அப்படி இந்த கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கலாம்.