டிசம்பர் 09, சென்னை (Chennai News): தமிழ்நாடு சட்டப்பேரவை (TN Assembly Session) கூட்டத்தொடர் டிசம்பர் 09 மற்றும் 10 ஆகிய தேதிகளில், சபாநாயகர் அப்பாவு (Speaker Appavu) தலைமையில் கூறுகிறது. கூட்டத்தொடரில் முதல் நிகழ்வாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர் ரத்தன் டாடா உட்பட பலருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள், துறைரீதியான கேள்விகளை முன்வைத்தனர். அதன்படி, முதலில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனிடம் (Durai Murugan) துறைசார்ந்த கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் தனது பதில்களையும் வழங்கி இருந்தார். தொடர்ந்து மாநில வளர்ச்சி & உள்துறை அமைச்சர் கே.என் நேரு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் உட்பட பலரும் தங்களின் பத்திகளை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்விக்கு அளித்து இருந்தனர். Bomb Threatening: 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறை தீவிர சோதனை.!
தயார்நிலையில் எதிர்க்கட்சியினர்:
இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு, மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அனுமதி எதிர்ப்பு தீர்மானம் உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்க இருந்தது முன்னதாகவே தெரியவந்தது. கேள்வி நேரம் நிறைவுபெற்றதும், அதிமுக, பாஜக உட்பட எதிர்க்கட்சியினர் தங்களின் கேள்விகளை அரசுக்கு எதிராக முன்வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசின் சார்பில் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாவிஷேகம்:
இந்நிலையில், மதுரை மாநகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குடமுழு நடைபெறும். தீ விபத்து ஏற்பட்ட வீர வசந்த ராயர் மண்டபத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மண்டபத்தினை புதுப்பிக்க 25 அடி நீளம் இருக்கும் கல் தூண்கள் தேவைப்பட்டது. ஒரே நேரத்தில் ஒரே தூண்களாக கற்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், பணிகளை முடிக்கவும் தாமதம் ஆகி இருக்கிறது என தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர் பாபு சட்டப்பேரவையில் அறிவித்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போது பதிவு செய்யப்பட்ட மதுரை மீனாட்சி கோவிலின் அழகு:
Madurai, TN | On the ninth day of the Chithirai festival, the Madurai Meenakshi Amman temple was decorated with colourful lights ahead of the celestial wedding of Goddess Meenakshi Amman and Goddess Sundareswarar. pic.twitter.com/4C6GnbZqSA
— ANI (@ANI) May 1, 2023