ஆகஸ்ட் 21, சென்னை (Chennai News): Madras Day Images & Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Chennai Day 2024:
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை நகரம், கடந்த கிபி 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரும் வகையில், கடந்த 2004ம் ஆண்டில் இருந்து மெட்ராஸ் தினம் எனப்படும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கிழக்கிந்திய கம்பெனி தரப்பில் இருந்து, வேங்கடப்பா நாயகரிடம் இருந்து சிறுநிலம் ஒன்றை வாங்கி உருவாக்கப்பட்ட சென்னை நகரம், ஒருகாலத்தில் மதராஸ், மதராசபட்டினம், சென்னைப்பட்டினம், மெட்ராஸ் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு, இறுதியாக சென்னை மாகாணம் ஆனது. வந்தவாசியை மையமாக கொண்டு ஆட்சி செய்து வந்த தாமல் வேங்கடப்பா நாயகர், பூந்தமளியை ஆட்சி செய்த தாமல் ஐயப்ப நாயகர் ஆகிய சகோதரர்களின் தந்தையான சென்னப்ப நாயகர் (Damarla Chennapa Nayaka) பெயரே இறுதியில் சென்னை நகரம் என அழைக்கப்பட்டது.
சென்னை (Chennai Da) நகரின் வயது 385:
இந்தியத்திருநாட்டில் மெட்ராஸ் (Madras Day) என்ற சென்னை நகரம் நிறுவப்பட்டதன் நாளினை ஒவ்வொருவரும் நினைவுகூரும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் சென்னை விழா கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 22, 1639ம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை நகரம், அன்றைய விஜயநகர பேரரசு ஆட்சியின் கீழ் இருந்த அரசர்களிடம் இருந்து, கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஆண்ட்ரூ கோகன், பிரான்சிஸ் டே ஆகியோர் வாங்கிய நாளாக கருதப்படுகிறது. 2004 க்கு பின்னர் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய இடத்தை தொன்றுதொட்டு தக்க வைத்துள்ள சென்னை நகரை நினைவுகூரும் பொருட்டு, கொண்டாடப்பட்டு வந்த சென்னை நாள் தற்போது பலராலும் சிறப்பிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி, சென்னை நகரம் உருவாகி 385 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மெட்ராஸ் நிறுவப்பட்ட நாளுக்கு அன்றைய பிரிட்டிஷ் அரசு 1939ம் ஆண்டு கொண்டாடத்திற்காக நிதியுதவியும் வழங்கி இருக்கிறது. Krishna Jayanthi Songs: கிருஷ்ண ஜெயந்தி 2024; கிருஷ்ணரின் சிறப்பு பாடல்களின் லிஸ்ட் இதோ..!
புதுமைப்பெற்ற சென்னை நகரம்:
இன்று இந்தியாவின் முக்கிய வணிகம், தொழில்நுட்பம், அரசாட்சி உட்பட பல்வேறு விஷயங்களின் அங்கத்தில் இடம்பெற்றுள்ள சென்னை நகரம், வந்தாரை வாழவைக்கும் நகரமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சென்னைக்கு புதிதாக பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருகாலத்தில் குறைவாக இருந்த நகரின் பகுதிகள், இன்று அண்டை மாவட்டத்தின் தலைநகர் வரை சென்னை என்ற அடையாளத்தை பெற்று நகரம் விரிவடைந்து இருக்கிறது. நாட்டின் முக்கிய பாதுகாப்பை வழங்கும் இராணுவ தளவாடங்கள் தயாரிப்பு நிலையம், இரயில் பெட்டிகள் தயாரிப்பு முனையம், பழம்பெரும் கபாலீஸ்வர் கோவில், திரைப்பட தயாரிப்பு நகரம், சர்வதேச அளவிலான மருத்துவ சிகிச்சைகள் பெரும் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் என பழமையில் புதுமைப்பெற்ற நகரமாக விளங்குகிறது.
உலகளவில் அடையாளம் பெறும் சென்னை:
ஆங்கிலேயரின் ஆட்சியில், அவர்களால் நிறுவப்பட்ட மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களை விட சென்னையின் வயது மிகவும் அதிகம் ஆகும். பழமைகள் மாறி நகரம் புதுமை பெற்றாலும், கலாச்சார பாதுகாப்பு, வளமான பாரம்பரியம், பன்முகத்தை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றால் தொடர்ந்து ஈர்ப்புத்தன்மையுடன் தன்னை புதுப்பித்து வைக்கிறது. உலகிலேயே மிகநீண்ட கடற்கரைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ள சென்னை மெரினா கடற்கரை, இன்று வரை தனது கரையோரம் பல காவிய படைப்புகளுடன் அலைகளாய் வளம் வருகிறது. பல்லவர்கள், சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள், விஜயநகர பல்லவர்கள் ஆட்சியின்போதும் சென்னை நகரம் பல்வேறு பெயர்கள் மற்றும் சிற்றூர்களாய் இருந்துள்ளது. Krishna Janmashtami 2024: கிருஷ்ண ஜெயந்தி விழா.. வழிபாட்டு முறையும், விரத பலன்களும்..!
வாழ்க்கையில் மாற்றத்தை தரும் தலைநகரம்:
இத்தகைய சென்னை நகரம் இன்று தனக்குள் பலகோடிக்கணக்கான மக்களை வைத்து எறும்பை போல சுறுசுறுப்பாய் செயல்பட்டு வருகிறது. படித்தவன், படிக்காதவன் என சமய, சமுதாய, ஜாதி, மத வேறுபாடுகள் என எதுவும் இன்றி உழைக்கும் வர்க்கத்திற்கு சொந்தமான சென்னை பலருக்கு புதிய அடையாளங்களை தேடித்தந்தது இருக்கிறது. பலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் உண்டாக்கி இருக்கிறது. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கிராமத்தில் வசித்து வரும் மனிதனும், சென்னை நகருக்கு எதோ ஓர் காரணத்திற்கு வந்து செல்கிறார். அந்த வகையில், பலருக்கு புதிய வாழ்க்கைக்கு வித்திடும் சென்னை நகரின் தோற்றத்தை நாம் கொண்டாடி மகிழ வேண்டும். லேட்டஸ்ட்லி தமிழும் சென்னையை நேசிக்கும், சென்னைக்கு சென்று வந்த மக்களுக்கு மனமார்ந்த மெட்ராஸ் தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறது. இத்துடன் உங்களுக்காக சில வாழ்த்து செய்திகளையும் பதிவு செய்துள்ளோம். அதனை உங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
1) என்னை ஈன்றெடுத்த அன்னை 10 மாதங்கள் என்னை சுமந்தாள், அன்னையான சென்னையே! இத்தனை நாள் என்னை நீ சுமந்ததற்கு நன்றி!
2) வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் நுழைவு வாயிலே சென்னை தான்.. அந்த சென்னையின் பிறந்தநாளில் நாங்கள் பிறந்ததாக மகிழ்ச்சி அடைகிறோம்!
3) சென்னைவாசிகள் ஒவ்வொருவருக்கும் இனிய சென்னை தின நல்வாழ்த்துகள்!
4) செங்கல்வராய நாயக்கர் தந்த சென்னப்பட்டினமே, என்னையும் உன்னுள் அங்கமாக்கிக்கொண்டதற்கு நன்றி! இனிய சென்னை தின நாள் நல்வாழ்த்துகள்!
5) வருக வருக என தமிழ் அன்னை அழைக்கும் தலைநகர் மெட்ராஸ்-ன் வரவேற்பை எண்ணி வியக்கிறேன்! இனிய சென்னை நாள் நல்வாழ்த்துக்கள்!
6) மெட்ராஸை நேசிக்கும் ஒவ்வொரு உயிருக்கும், மண்ணின் மைந்தர்கள் சார்பில் மனமார்ந்த மெட்ராஸ் தின வாழ்த்துகள்!