International LGBT Pride Day (Photo Credit: LatestLY)

ஜூன் 28, புதுடெல்லி (New Delhi): எல்ஜிபிடி (LGBT) என்று அழைக்கப்படும் மாற்று பாலின ஈர்ப்பு, மாறிய பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வு அண்மைக்காலமாக அதிகரித்தாலும், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இன்றளவும் சமூக புறக்கணிப்பைச் சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக அளவில் ஜூன் மாதம் 28ஆம் தேதி சர்வதேச எல்ஜிபிடி தினம் (International LGBT Pride Day) கடைபிடிக்கப்படுகிறது.

எல்ஜிபிடி என்றால் என்ன?: எல்ஜிபிடி என்ற பெயரில் திருநங்கைகள், திருநம்பிகள், தன் பாலின ஈர்ப்பாளர்கள், பாலின ஈர்ப்பு இல்லாதவர்கள் என பலதரப்பட்டவர்கள் இணைந்து கொள்கின்றனர். இதில் தன்பாலினை ஈர்ப்புக் கொண்டவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் எனவும், உடலுறவில் மட்டும் ஆர்வம் கொள்பவர்களை பாலின ஈர்ப்பு கொண்ட ஆண் அல்லது பெண் என்றும் அழைக்கின்றனர். இந்த சமூகத்தில் இவர்கள் மற்றவர்களிடயே தங்களது அடையாளத்தை கூறினால், அவர்கள் தங்களையும் தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்களாக மாற்றி விடுவார்களோ என்ற அச்சம் ஒரு சிலருக்கு உள்ளது. ஆனால் உண்மையில் ஒருவரது பாலின ஈர்ப்பை யாராலும் மாற்ற முடியாது. இதுபோன்ற விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. Car Hits School Bus: 30 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து மீது கார் மோதி விபத்து.. தெலங்கானாவில் பரபரப்பு..!

தன்பாலினத்தவர் பாதுகாப்பு: தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு பரவலாக செய்யப்படும் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு, மத்திய அரசு தடை விதிக்கவேண்டும் என்றும் தன் பாலின ஈர்ப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை 12 வாரங்களுக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.