ஜனவரி 13, சென்னை (Festival News): “பழையன கழிதலும்,புதியன புகுதலும்” என்று போகிப்பண்டிகை அழைப்பார்கள். அப்படி பழையப் பொருட்களை சுத்தம் செய்து வீடுகளுக்கு வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறோம். இனிப்பு, கரும்பு என கொண்டாட்டம் ஒரு பக்கம் மகிழ்ச்சி அளித்தாலும் வீடு சுத்தம் செய்வது, வீட்டை அலங்கரிப்பது போன்றவற்றை நினைத்தால் தலையே சுற்றிப் போகும். ஆனால் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து சுத்தப்படுத்தினால் வேலை வேகமாகவும் முடியும் அதே சமயம் அனைவருக்குள் இருக்கும் அன்பும் பெருகும். முதலில் எங்கிருந்து துவங்கலாம் என யோசித்து படிப்படியாக ஒரு ஒரு அறையாக சுத்தம் செய்ய ஆரம்பியுங்கள். Pongal Wishes Tamil: "தித்திக்கும் பொங்கலாய் உங்கள் வாழ்வும் இனிக்கட்டும்" உங்களுக்கான இனிய பொங்கல் வாழ்த்துகள் இதோ.!
சுத்தம் செய்யலாம் வாங்க:
- முதலில் ஆங்காங்கே கிடைக்கும் பொருட்களை அதனுடைய இடத்தில் வையுங்கள். எடுத்து வைக்கும் போதே அதை ஒரு முறை துடைத்து வையுங்கள்.
- பிறகு வழக்கம் போல தரையை மாப் போட்டு அல்லது அலசி சுத்தம் செய்யுங்கள். அதனுடன் கூடுதலாக நாற்காலி, மேஜை, கண்ணாடி, மற்றும் மின் சாதனங்களை சுத்தம் செய்யுங்கள்.
- மின் சாதனங்கள் துடைக்கும் போது கூடுதல் கவனம் தேவை.
- துணிகளை துவைக்கும் போது இந்த முறை திரை சீலை, தரை விரிப்புகள், தலையணை மற்றும் மெத்தை உறைகள் போன்றவற்றைத் தனித்தனியாக ஊற வைத்து கொஞ்சம் கொஞ்சமாக துவையுங்கள்.
- கதவு, ஜன்னல்களை ஈரத்துணிகள் கொண்டு துடைத்து சுத்தப்படுத்துங்கள்.
- ஃபேன்களை கட்டாயம் கழற்றி சுத்தப்படுத்தும்போது சற்று எலுமிச்சை சாறு தொட்டு தேய்தால் அழுக்குகள் நீங்கி விடும்.
- வீட்டிலுள்ள இரும்பு குழாய்களை சோடா உப்பு கலந்த தண்ணீரில் சுத்தப்படுத்த மறவாதீர்கள்.
- பூஜை அறையில் விளக்குகள் சுத்தப்படுத்தும் போது தண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி ஊறவிட்டு புளி, உப்பு தொட்டு விளக்கினால் பிசுக்குகள் எளிதில் நீங்கி விடும்.
- வீடு முழுவதும் சுத்தம் செய்த பின் கூரைப்பூ, மாவிலை தோரணங்கள் கட்டி புதுப்பொங்கலை வரவேற்கலாம்.
அலங்கார யோசனைகள்:
பொங்கல் கோலம்(Pongal Kolam): பொங்கல் பண்டிகையின் அலங்காரத்தில் மிக முக்கியமானது கோலம். பொங்கல் பானை, காளை மாடு, கரும்பு, சூரியன் ஆகிய கூறுகளுடன் பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்டிருக்கலாம். பூக்கோலம், விளக்கு கோலம் போடலாம். Pongal Kolam 2025: பொங்கலுக்கு இப்படி கோலங்களை போடுங்க.. ஏரியாவே வாய்ப்பிளக்கும்.!
கரும்பு அலங்காரம்: வீட்டின் வாசலில் கரும்புகளை கொண்டு அலங்காரம் செய்யலாம். பொங்கல் வைக்கும் இடத்தில் மூன்று கரும்புகளைக் கொண்டு கூடாரம் அமைத்து பொங்கல் வைக்கலாம்.
மலர் அலங்காரங்கள்: பொங்கல் பண்டிகையின் போது உங்களுக்கு அருகில் கிடைக்கும் மலர்கள் மற்றும் மாவிலைகளை கொண்டு வீடுகளை அலங்கரிக்கலாம்.
பொங்கல் வைக்க உகந்த நேரம்:
தை திருநாள் முதல் நாளில் பொங்கல் வைக்க காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நல்ல நேரம் உள்ளது. இதன் பின்னர், காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை உகந்த நேரமாகும்.