Astrology (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 11, சென்னை (Chennai News): சனி பெயர்ச்சி 29 மார்ச் 2025 அன்று மீன ராசியில் சனி பூரட்டாதி நான்காம் பாத பிரவேசத்தில் தொடங்கி , 17 மாறுபட்ட நட்சத்திர சாரங்களில் சனி சஞ்சாரம் நிகழ்கிறது சனி பகவான் மீன ராசியில் ஜூன் 3 , 2027 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் அதாவது 29 மார்ச் 2025 முதல் ஜூன் 3 , 2027 வரை உள்ள காலத்தில் சனி மீனத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கான நட்சத்திர பாதம் சார்ந்த சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்கலாம்.

சிம்மம் சனி பெயர்ச்சி பலன்கள் (Simmam Sani Peyarchi Palan 2025):

சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:

உடல் நலம் மிக கவனமாகப் பார்க்க வேண்டும், உறுப்பு செயல் இழப்பு அளவுக்கு பாதிப்புகள் உண்டாக்கலாம். உத்தியோகத்தில் அதிக சிரமங்கள் வரும். இது தவிர வேலை இழப்பு நடக்கலாம். கடன் கொடுத்திருந்தால் வசூல் ஆகாமல் இழுத்தடிக்கப்படும். விரயமாக மாறலாம். வழக்கு , போலீஸ் போன்ற தொந்தரவுகள் இருந்தால் சுமுகமாக முடியாமல் பெரிய அளவில் பிரச்சனை வரும். அதிலும் குடும்ப உறவுகளுக்கு இடையில் வழக்கு எனில் பெரிய பிரச்சனை உருவாகும் வாய்ப்பு உள்ளது. விவாகரத்து போன்ற வழக்குகள் சாதகமாக முடியாமல் எதிர் தரப்பாக தீர்ப்பு ஆவதற்கு வாய்ப்பு உண்டு. இவை யாவும் சனி பூரட்டாதி 4 ம் பாத சாரத்தில் பயணிக்கும் காலம் நடக்கும். சனி உத்திரட்டாதி சாரம் அடையும் போது , ஆபத்து விலகும். உடல் நலம் மேன்மை அடையும். மூச்சு விடும் அளவு நிவாரணம் கிடைக்கும். பெரிய மனிதர்கள் உதவி அவசியம் கிடைக்கும் சட்ட உதவியும் பண உதவியும் தாராளமான அளவில் கிடைக்கும். ஆனால. கடன் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் விரோதிகளாக மாறும் காலகட்டம் என்றும் சொல்லலாம் ஆகவே யாரை நம்புவது யாரை நம்ப வேண்டாம் என்ற மிக முக்கியமான விஷயத்தில் தெளிவான முடிவு எடுத்து அதன்படி நடக்க வேண்டிய காலகட்டம். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: கடக ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!

யதார்த்தமாக சில விஷயங்களை கேள்வி பட்ட அளவிலேயே நம்ப வேண்டாம் இது சனி உத்திரட்டாதி சாரத்தில். சஞ்சாரம் செய்யும் போது மகம் நட்சத்திரத்தைச் சேர்ந்த அன்பர்கள் மிகவும் கவனமுடன் கடைப்பிடிக்க வேண்டிய விஷயமாகும். சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணம் செய்யும்போது மகம் நட்சத்திர அன்பர்களுக்கு வேலையில் சின்ன அளவில் பின்னடைவு பதவி கீழ் இறங்குதல் போன்றவை நிகழலாம் ஆனால் அவை அனைத்தும் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ள வேண்டும். சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது பெரிய அளவில் பணம் முதலீடுகள் செய்வதை தவிர்க்கலாம் பாதுகாப்பு இல்லாத அளவில் பணம் இழப்பு நடக்க கூடிய காலம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பங்கு சந்தை போன்ற விஷயங்களில் அதிக அறிவு கொண்டவர்களும் தடுமாறி சறுக்கல் ஏற்படும் காலம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் ஆகவே பலமுறை யோசித்த பிறகு முதலீடுகள் செய்ய வேண்டும்.

கை பொருள் இழக்க வேண்டி வரும் திருட்டு நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்த பொருள் மீது ஒன்றுக்கு பலமுறை கவனமான எச்சரிக்கையோடு முடிவு எடுக்க வேண்டும். சிலருக்கு திடீர் பயணங்கள் மூலம் அனுகூலமான பண வரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது ஆகவே பயணங்களை ஏற்பதில் சுணக்கம் காட்ட வேண்டாம் அதே நேரம் பயணத்தில் விபத்து போன்றவை நடக்காமல் இருப்பதற்கு எச்சரிக்கை எடுத்துக்கொண்டு பயணிக்கவும் பயணத்தில் நன்மை உண்டு என்பதை மனதில் வைக்கவும், கணவன் மனைவி உறவு பண பிரச்சனையால் சிக்கலை சந்திக்க கூடும் ஆகவே கணவன் மனைவி உறவு பண விஷயத்தில் ஓப்பனாக பேசிக் கொள்வது நல்லது. இதுவரை மகம் நட்சத்திர அன்பர்கள் அனுபவித்த கஷ்டங்கள் எல்லாம் அதாவது சனி பூரட்டாதி நட்சத்திர சாரத்திலும் உத்திரட்டாதி நட்சத்திர சாதத்திலும் மீன ராசியில் பயணித்திருக்கும் போது அனுபவித்த கஷ்டங்கள் எல்லாம் சனி அதே மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது நேர் மாறாக மாறி அதிர்ஷ்டம் கூடி பணவரவு அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும் பெரிய அளவில் உதவிகள் கிடைக்கும் கடன் கேட்போருக்கு தாராளமாக கடன் உதவி கிடைக்கும் ஆனால் அதை கவனமாக பயன்படுத்தும் எண்ணம் வராது. ஆகவே அதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:

சனிப்பெயர்ச்சியை கண்டு சிம்ம ராசி பூரம் நட்சத்திர அன்பர்கள் பயம் கொள்ள வேண்டாம். இந்த சனி பெயர்ச்சி நிச்சயம் ஆதாயத்தை கொண்டு வரும் முயற்சி என்று சொல்லலாம் சற்று தாமதம் ஆனாலும் பல விஷயங்கள் நன்மையாக நடப்பதற்கு பலமான காரணம் சனி பெயர்ச்சியால் உருவாகிறது. அனுகூலமாக நடக்கிறது என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவசரப்படுகின்றவர்கள் நஷ்டம் அடைவார்கள் என்பதையும் சனிப்பெயர்ச்சி காண்பிக்கிறது. காரணம் கோச்சார ரீதியாக சனி வக்கிரகதி அடையும் போது சிம்ம ராசி பூரம் நட்சத்திர அன்பர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் ஆதாயமான காலகட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் உருவாகிவிடும் என்பதை கவனத்தில் வைக்க வேண்டும். அதாவது சனிப்பெயர்ச்சி முதல் காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் நன்மைகளை தக்க வைத்துக் கொள்வதற்கு அறிவை பயன்படுத்த வேண்டும்.

பல வருடங்களாக சங்கடப்படுத்திக் கொண்டிருந்த உறவுகளின் புதிய முன்னேற்றம் ஏற்பட்டு ஓரளவு சகஜ நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கலாம். ஆனால் முழுமையாக உறவு சிக்கல் தீராது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீண்ட தூர பயணங்கள் அமைவதற்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திர அன்பர்கள் தயாராக வேண்டும். இப்படியான பயணங்கள் விரயமாகவே முடியும் என்றாலும் பயணத்தை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த பயணங்களால் புதிய நட்புகள் மட்டும் உருவாகும் அமைப்பு, பிற்காலத்தில் பயன் அளிப்பதாக அமையும். மாணவர்களுக்கு அனுகூலமான சனிப்பெயர்ச்சி என்று சிம்ம ராசி பூரம் நட்சத்திர மாணவர்களுக்கு சொல்லலாம் .அதிக கஷ்டங்களை கொடுத்தாலும் அதற்குரிய பலனை சனி அவசியம் கொடுப்பார் .அதாவது தேர்வுகளில் தேர்வு ஆவது மிக கஷ்டமாக இருக்கும். ஆனால் அவசியம் நல்ல பலன் கிடைக்கும் முடிவாக அமையும் என்று நிச்சயம் சொல்லலாம்.

கணவன் மனைவி உறவு, தந்தை தாய் பிள்ளை உறவு போன்றவை பல நிலைகளில் சிக்கலை சந்திக்க கூடும் ஆகவே உறவுகளில் இருக்கும் கசப்பான அனுபவங்களை மறந்து விட கற்றுக் கொள்ள வேண்டும். உடல் நலத்தைப் பொறுத்தவரை இந்த சனிப்பெயர்ச்சி சிம்ம ராசி பூரம் நட்சத்திர அன்பர்களுக்கு பெரிய அளவில் அனுகூலமானதாக இல்லை ஆனாலும் உடல் நலம் பாதிப்பு அடைவது பெரிய சிக்கல்களை உருவாக்காது சின்ன சின்ன அளவில் மட்டும் உடல் உபாதைகள் இருக்கும் மருத்துவ செலவுகள் கட்டுக்கடங்காமல், போவதற்கு வாய்ப்பு அதிகம் ஆகவே கவனமாக இருக்கவும்.

சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம் அன்பர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்:

எதிரிகள் கை மேலோங்கி நிற்கும். .எதிர்ப்பு அதிகமாகும். கடன் சுமை பெருகும். இப்படியாக தொடங்குகிறது இந்த சனிப்பெயர்ச்சி காலம், உங்களுக்கு. ஆகா பிரமாதமாக இருக்கிறது என்று யாராவது சொல்லி உங்களிடம் முதலீடு வாங்கி அல்லது உங்களது ஐடியாவை வாங்கி அது நஷ்டமாக அமையும் காலமாக இருக்கிறது, ஆகவே இது போன்ற ப்ராஜெக்ட் விஷயங்களில் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அல்லது அரசாங்கம் அல்லது வாடிக்கையாளர்கள் இடத்தில் சண்டை சச்சரவு உருவாவதற்கு வாய்ப்பு அதிகம். .உரையாடலில்/வாக்குவாதத்தில் அமைதி காக்கவும். அதே சமயம் உத்தியோகத்தில் உயர்வுக்காக தேர்வுகள் எழுதுவது சர்டிபிகேட் வாங்குவது போன்ற முயற்சிகளில் அவசியம் ஈடுபடலாம் இவை நல்லவிதமாக முடிவதற்கு இந்த சனி பெயர்ச்சி காரணமாக இருக்கும்.

மிக முக்கியமாக அரசாங்க வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுக்காக ஏதாவது டிபார்ட்மெண்ட் பரீட்சை எழுத வேண்டி இருந்தால் அல்லது கல்வி தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தால் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மிகவும் அனுகூலமான காலம்.ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதை யோசித்து விட்டு செய்யவும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பிரச்சனைகள் அவற்றினால் சங்கிலி போல் வருவதற்கு சனி பெயர்ச்சி காரணமாக அமைகிறது .ஆகவே மிக கவனமாக இருக்கவும். ஒரு விஷயம் பெண்டிங் இருக்கும்போது மற்றொரு புதிய ப்ராஜெக்ட் எடுத்துச் செய்யும் வேலைகளை தவிர்க்கவும். வழக்குகள் முடிவில்லாமல் இழுத்துக் கொண்டே போகும் காலம் ஆகவே அதை எப்படி முடிப்பது என்ற யோசனையை தவிர்த்து விட்டு சற்று விஷயத்தை ஆற ப் போட பழகிக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே தோல் வியாதி இருப்பவர்கள் அல்லது தோல் சம்பந்தப்பட்ட உபாதை இருப்பவர்கள் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டாம் .இந்த காலகட்டத்தில் தோல் வியாதி மிகவும் அதிகமாக சிம்ம ராசி உத்திரம் நட்சத்திர அன்பர்களுக்கு சனி பெயர்ச்சி தீய பலனாக காட்டுகிறது. ஆகவே மிகவும் கவனமாக இருக்கவும், பல காலமாக கவனிப்பு இன்றி இருக்கும் பூர்வீக சொத்துகள் மீது மிகுந்த அக்கறை எடுத்து போய் கவனித்து வரவும். அவை கைநழுவி போகும் வாய்ப்பு உண்டு. உத்திரம் முதல் பாதநட்சத்திர அன்பர்கள் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தை மிகவும் கவனமுடன் எதிர் கொள்ள வேண்டும். காரணம் மனநிலையில் அதிக அழுத்தம் உருவாக்கும் விஷயங்கள் நடந்தே தீரும்.