
பிப்ரவரி 21, சென்னை (Chennai News): சனி பெயர்ச்சி 29 மார்ச் 2025 அன்று மீன ராசியில் சனி பூரட்டாதி நான்காம் பாத பிரவேசத்தில் தொடங்கி , 17 மாறுபட்ட நட்சத்திர சாரங்களில் சனி சஞ்சாரம் நிகழ்கிறது சனி பகவான் மீன ராசியில் ஜூன் 3 , 2027 வரை சஞ்சாரம் செய்கிறார்.
விரைய சனி:
முதலில் விரைய சனி என்பது ஏதாவது ஒரு விதத்தில் விரயத்தை கொடுத்து பொருளாதார வளர்ச்சிகளை தடை செய்யும்.ஆக யோக திசைகள் நடப்பில் இருந்தால் 30 வயதிற்கு மேல் உள்ள ஜாதகர்கள் நடக்கக்கூடிய விரயத்தை சுப விரயங்களாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்வது நல்லது. அதாவது கடன் வாங்கியாவது மனை வாங்கிப் போடுவது, கடன் வாங்கியாவது வீடு கட்ட முயற்சி செய்வது போன்ற விஷயங்களுக்கு 30 வயதிற்கு மேல் உள்ள ஜாதகர்கள் முயற்சி செய்யலாம். இதனால் விரயத்தில் நடக்க உள்ள தீமைகள் குறையும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: கும்பம் ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
50 வயதிற்கு மேல் உள்ள ஜாதகர்கள் குழந்தைகளுக்காக அதாவது திருமண வயதில் வீட்டில் ஆண் பிள்ளை அல்லது பெண் பிள்ளை இருந்தால், அவர்களுக்கு திருமணம் முயற்சி செய்து நடக்கக்கூடிய விரயத்தை சுப விரயமாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்யலாம். இனி பிறந்தது முதல் 10 வயதுக்குள் உள்ள மேஷ ராசி ஜாதகர்கள் அவர்களுக்கு அழுத்தங்கள் உணர்வதை விட ஜாதகரின் தாய் தந்தைக்கு சிரமம் சற்று அதிகமாக இருக்கும். அதாவது குழந்தை ஏழரைச் சனியில் பிறந்தால் தாய் தந்தைக்கு மனக்கசப்புகள் உண்டாவது பொருளாதார ரீதியான இழப்புகளை உண்டாக்கி தருவது, இவற்றிற்கெல்லாம் பலன் தரும் ஆக ஏழரைச் சனி அமைப்பில் குழந்தைகள் பிறந்தால் சற்று கஷ்டங்கள் இருக்கும்.
பத்து வயதுக்கு மேல் 20 வயதுக்குள் விரைய சனியை சந்திக்கக்கூடிய ஜாதகர்கள் நினைத்த கல்வி கிடைப்பதில் சற்று சிக்கல்கள் இருக்கும். 20 வயதிற்கு மேல் உள்ள மேஷ ராசி ஜாதகர்கள் திருமண வாழ்க்கையில் முடிவெடுப்பது புதிதாக திருமணம் நடந்திருந்தால் அதில் சற்று மன அழுத்தங்கள் உண்டாவது இவற்றிற்கெல்லாம் பலன் தரும். ஆக இந்த விரையே சனி என்பது இரண்டாவது சுற்று என்று சொல்லக்கூடிய 30 வயது மேல் உள்ள ஜாதகர்களுக்கு சுப விரையங்களை உருவாக்கிக் கொள்வதால் நடக்கக்கூடிய தீமைகளை நன்மைகளாக மாற்றிக் கொள்ளலாம்.