செப்டம்பர் 5, சென்னை (Festival News): செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் தேசிய ஆசிரியர் தினம், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கிறது. அவர் ஒரு சிறந்த ஆசிரியர் மற்றும் தத்துவஞானி என்பதால், அவருடைய நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர்களின் பங்கு: மாணவர்களின் வாழ்க்கையில் ஆசிரியர்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றனர். அவர்கள் அறிவு மட்டுமல்லாமல், நல்லொழுக்கங்களையும் கற்றுத் தருகின்றனர். கல்வி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானது. ஆசிரியர்கள் இந்த முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருக்கின்றனர். சிலர் ஆசிரியர் தினத்தை ஒரு வணிகக் கொண்டாட்டமாகக் கருதுகின்றனர். ஆனால், இந்த நாள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைப் போற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகும். World Coconut Day 2024: உலக தேங்காய் தினம்.. அதன் நன்மைகள் என்னென்ன தெரியுமா?!
ஆசிரியர் தின கவிதைகள்:
அறிவுத் தூண்டுகோல்களுக்கு....
அகரம் சொல்லித் தந்த சிகரங்களே
உங்களுக்கான வாழ்த்துப்பாவினையும்
அதிலிருந்தே தொடங்குகிறேன்
அறிவின் துளிகளை அள்ளிவந்து
வகுப்பறையெங்கும் புதுமை செய்கிற
அற்புத வித்தகர்கள் நீங்கள்
கை பிடித்து
சொல்லித் தந்து தான்
கைதூக்கி விடுகிறீர்கள்
களிமண்ணையும் வண்ணங்கள்
குழைத்து பெருஞ்சிற்பமாக்கும்
அருஞ்சிற்பிகள் நீங்கள்..
படி படி என பாடஞ்சொல்லும் நீங்கள்
தெய்வத்தினும் ஒரு படி மேல் தான்
நீங்கள் அறியாமை இருளகற்றும் அறிவுச்சூரியன்கள்
உங்கள் பலகை பாடம் தான் பல கைகளை உயர்த்தியது
இருட்டுக்கே வெள்ளையடிக்கிற
உங்கள் நல்லமனசு தான்
கடைசிபெஞ்சு மாணவனின்
உள்ளத்தையும் கொள்ளையடித்தது
விமர்சனங்கள் ஆயிரம் வந்தாலும்
சரிசமமாய் ஏற்கிற சாதகப் பறவைகள் நீங்கள்
கறை பூசுதல் எளிது
ஏசுதல் எளிது பரிகசித்தல் எளிது
இவையாவும் கடந்து நீங்கள்
பாலநெஞ்சங்களிடம் காட்டும்
அக்கறை தான் அளவிடற்கு அரிது
தேசம் சந்திக்கிற ஒவ்வொரு
கசப்பான சம்பவங்களிலும்
இறுதியாய் உதிர்க்கிற ஒற்றைக்கருத்து
ஆசான்களின் கைகள் கட்டப்பட்டதே
இக்கொடூரங்களுக்குக் காரணம் என்பதாய் இருக்கும்... Saiva Mutton Sukka Recipe: மட்டன் சுக்கா சாப்பிடுர மாதிரயே இருக்கும்.. சைவ மட்டன் சுக்கா இப்படி செய்ங்க..!
எது எப்படி இருப்பினும்
எண்ணமெலாம் மாணவர்
நலனிலேயே நிமிடங்களை
நகர்த்துகிற நல்லாசான்களே
இப்பெருவுலகில் ஏதோ ஒரு
குழந்தையின் மனதில் நிச்சயம்
எழுதப்பட்டுருக்கும் உங்களுக்கான
நல்லாசிரியர் என்ற உயர்விருது
அந்த அங்கீகாரத்தை மனதில் வைத்தே
இன்னுஞ் சிறப்பாய் பணிசெய்யுங்கள்
மாற்றத்தின் மகாத்மாக்களே
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
- கவிதைக்கு நன்றி, சீனி.தனஞ்செழியன்.