Saiva Mutton Sukka (Photo Credit: YouTube)

செப்டம்பர் 04, சென்னை (Kitchen Tips): செவ்வாய், வெள்ளி, சனி, மற்றும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை போன்ற விரத நாட்களிலெல்லாம் பலரது வீடுகளிலும் அசைவம் சமைப்பதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் ஒரு சில சமயம் வீட்டிலுள்ளவர்கள் இன்றைய தினங்களில் ஏதேனும் அசைவம் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என்று அடம் பிடிப்பார்கள். அவ்வாறு அந்த நேரத்தில் அசைவம் செய்யும் அதே சுவையில் சைவ உணவுகளையும் எளிமையாக சமைத்து கொடுக்க முடியும். அப்படி செய்யக் கூடிய ஒரு சுவையான உணவு தான் வாழைக்காய் சுக்கா.

தேவையான பொருட்கள்:

சோயா (மீல் மேக்கர்) - ½ கிலோ

சோள மாவு - 1 கப்

சி.வெங்காயம் - ¼ கி

காய்ந்த மிளகாய் - 4

இஞ்சி பூண்டு விழுது - 2 தே. கரண்டி

தக்காளி - 2

மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி

மிளகாய்த்தூள் - 3 தே.கரண்டி

உப்பு Naan Recipe: வீட்டிலேயே கடை சுவையின் தரமான நாண் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ‌..!

மசாலா அரைக்க:

சோம்பு - 1 தே.க

மிளகு - 1 தே.க

மல்லி - 2 தே.க

சீரகம் - 1 தே.க

கா. மிளகாய் - 4

கிராம்பு, ஏலக்காய் -2

பட்டை, அன்னாச்சிபூ - 1

இவைகளை பொன்நிறமாக வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை: சோயாவை கொதிநீரில் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடத்திற்கு வேகவைத்து எடுத்து தண்ணீரில் கழுவி நன்கு வடித்துக் கொள்ளவும். பின் பாத்திரத்தில் சோயாவில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது ஒரு வானளியில் என்ணெய் ஊற்றி சி.வெங்காயம்,மிளகாய், கறிவேப்பில்லை, இஞ்சிபூண்டு விழுது, தக்காளி போட்டு நன்கு வதக்கி அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளர வேண்டும். அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு போட்டு, கொதிக்க ஆரம்பிக்கும் போது பொரித்தெடுத்த சோயாக்களை சேர்த்து கிளரிய 4 நிமிடத்தில் சுவைக்க தயாராகிவிடும்.