ஜூலை 31, புதுடெல்லி (New Delhi): விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக கிசான் கிரிடெட் கார்டுகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த கிரெடிட் கார்டுகள் உழவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், மீனவர்களுக்கு என பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. கால்நடைகளுக்கான, பசு கிசான் கிரெடிட் கார்டுகள் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கப்படுகிறது. கோழி, ஆடு, மாடு, மீன் போன்ற கால்நடைகள் வளர்க்கும் பயனாளர்கள் இந்த (Pashu Kisan Credit Card Scheme) கார்டைப் பயன்படுத்தி பலன் பெறலாம். Amla Juice Recipe: ஆரோக்கியத்திற்கு அற்புதம் செய்யும் அரை நெல்லிக்காய் ஜூஸ் செய்வது எப்படி? விபரம் உள்ளே!
பசு கிசான் கிரெடிட் கார்டு: வங்கிகள் பொதுவாக விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 7 சதவீதத்திற்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கடன் அட்டை வைத்திருப்போருக்கு 3% வரை தள்ளுபடி கிடைக்கும். ஆண்டிற்கு ஒரு முறை 3 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். வருமானத்தின் அடிப்படையில் கிரெடிட் கார்டு 30,000 மற்றும் 1 லட்சத்திற்கும் கொடுக்கப்படுகிறது. இந்த பசு கிசான் கிரெடிட் கார்டை, கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். கடன் அட்டை பெற விண்ணப்பப் படிவத்துடன் நில ஆவணம், ஆதார் அட்டை, புகைப்படம் கொடுக்கப்பட வேண்டும்.