Report Fish Disease App (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 19, புதுடெல்லி (Technology News): லக்னோவில் உள்ள ICAR - National Bureau of Fish Genetic Resources (NBFGR) ஆல் ‘மீன் நோய் அறிக்கை’ (Report Fish Disease App) உருவாக்கப்பட்டு, மத்திய மீன்வள கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலாவால் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்ட்ராய்டு மொபைல் செயலியானது நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் நோய்களை கண்காணிப்பதும் அதை முன்கூட்டியே தடுப்பதுமே இதன் முக்கிய நோக்கமாகும். Happy Birthday GPay: கூகுள் பே-க்கு இன்று 7-வது பிறந்தநாள்.. வாழ்த்து பதிவை வெளியிட்ட கூகுள் இந்தியா..!

மீன் நோய் அறிக்கை: மீன் விவசாயகள், கள அளவிலான அதிகாரிகள் மற்றும் மீன் சுகாதார நிபுணர்களை ஒருங்கிணைக்கும் மைய தளமாக ‘மீன் நோய் அறிக்கை’ செயலி செயல்படும். மேலும் இது மாவட்ட மீன்வள அலுவலர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் விவசாயிகளை நேரடியாக இணைப்பதால், விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், சவால்களையும் சரி செய்வதுடன், உடனடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு இழப்புகளையும் தடுக்கமுடியும். மேலும் பண்ணைகளில் வளர்க்கும் இறால், வண்ண மீன்கள், போன்றவற்றிற்கு நோய்தாக்குதல் ஏற்பட்டால் இதில் புகாரளிக்கலாம். இது நிபுணர்களிடமிருந்து உடனடியாக அறிவியம் மற்றும் தொழில்நுட்ப உதவியை பெற்றுத்தரும். மேலும் விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் நிதிநிலையையும் மேம்படுத்தும்.