செப்டம்பர் 23, புதுடெல்லி (Special Day): சர்வதேச சைகை மொழி தினம் (International Sign Language Day) என்பது உலகெங்கிலும் உள்ள காதுகேளாத சமூகங்களின் மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை ஊக்குவிக்க மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் 23ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
வரலாறு (History): காது கேளாதோருக்கான 135 தேசிய கூட்டமைப்புகளின் கூட்டமைப்பான உலக காது கேளாதோர் கூட்டமைப்பு (WFD), உலகெங்கிலும் உள்ள 70 மில்லியன் காது கேளாதோர் சார்பாக இந்த தினத்திற்கான யோசனையை முன்மொழிந்தது. 1951ம் ஆண்டில், உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நிலையில் முதன்முதலில் 2018ல் சர்வதேச சைகை மொழிகள் தினம் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்டது. Agathikeerai Poriyal: எலும்புகளுக்கு வலுசேர்க்கும் அகத்திக்கீரை; சுவையான பொரியல் செய்து அசத்துவது எப்படி?..!
முக்கியத்துவம் (Significance): உலக மக்கள்தொகையில் 20% மக்களுக்கு லேசான செவித்திறன் குறைபாடும், கிட்டத்தட்ட 5% மக்களுக்கு சற்று தீவிர செவித்திறன் குறைபாடும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலகமக்கள் தொகையில் 18 சதவீதமும் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2.21% அதாவது மூன்றுகோடி மக்களும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களுள் பேச்சு மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் 26% உள்ளனர், அதில் 29% பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள் ஆகும். இவர்கள் 300க்கும் மேற்பட்ட வெவ்வேறு சைகை மொழிகளைப் பயன்படுத்துகின்றனர்.
சைகை மொழிகள் மக்கள் பேசும் மொழிகளிலிருந்து கட்டமைப்பு ரீதியாக வேறுபடுகின்றன. எனினும் உலகளாவிய சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளின் போது மக்கள் பயன்படுத்தும் ஒரு சர்வதேச சைகை மொழியும் உள்ளது. தற்போது சைகை மொழிக்காக பல புதிய வடிவங்களில் செயலிகள் அறிமுகபடுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சில செய்தி நிறுவனங்கள் காது கேளாதோருக்கென பிரத்யோகமாக செய்தி வாசிப்பாளர்களை நியமன செய்துள்ளனர். சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்சினைகள், கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகளை உருவாக்குதலை ஒவ்வொரு நாடும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.