செப்டம்பர் 30, புதுடெல்லி (Special Day): இந்த உலகில் சுமார் 6500 மொழிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அனைவராலும் அனைத்து மொழிகளாலும் தொடர்பு கொள்ள இயலாது. அதாவது எல்லா மொழிகளையும் எல்லாரும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இப்படியான நிலையில் மொழிபெயர்ப்பு என்பது அவசியம். இதனை கவனத்தில் கொள்ளவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ஆம் தேதி சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம் (International Translation Day) கொண்டாடப்படுகிறது.
வரலாறு: 1953 ஆம் ஆண்டில் பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு ஆரம்பிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒருமைப்பாட்டை காட்டும் முகமாக இந்த அமைப்பு 1991 ஆம் ஆண்டு முதல் உலக அளவில் சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தினை கொண்டாட அழைப்பு விடுத்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி உலக மொழிபெயர்ப்பு தினம் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. Gandhi Jayanti 2024: "மனிதகுலத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் அமைதி" காந்தி ஜெயந்தி..!
மொழிபெயர்ப்பு: வடகிழக்கு இத்தாலி சேர்ந்தவர் செய்ண்ட் ஜேரோம். இவர் கிரேக்க கையெழுத்து பிரதிகளிலிருந்து பைபிளின் பெரும் பகுதியை லத்தின் மொழியில் ஐந்தாம் நூற்றாண்டில் மொழிபெயர்ப்பு செய்தார். இதுதான் உலக அளவில் செய்யப்பட்ட முதல் மொழிபெயர்ப்பு ஆகும். மொழிபெயர்ப்பின் முன்னோடியாக அறியப்படும் அவர் 420 செப்டம்பர் 30 இறந்தார். அவரின் இறந்த நாளினை நினைவு கூறும் வகையிலேயே சர்வதேச அளவில் மொழிபெயர்ப்பு தினத்தினை இந்நாளில் கொண்டாடுகின்றனர்.