Agathikeerai Poriyal (Photo Credit: YouTube)

செப்டம்பர் 22, சென்னை (Cooking Tips): கீரை வகை உணவுகள் எப்போதும் உடலுக்கு பல்வேறு சத்துக்களை வாரி விளங்குபவை. அந்த வகையில், அகத்திக்கீரையை வைட்டமின், உயிர்சத்து, சுண்ணாம்புச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். உடல் உஷ்ணம் குறைய, கண்களில் நீர் வடிதல், கொப்புளம், இளநரை பிரச்சனை சரியாக, இரத்தம் உறைதல் குணமாக, பித்தம் சார்ந்த பிரச்சனைகள், கபம், வாதம் நீங்க, எலும்புகள் பலம்பெற, தோல் சார்ந்த பிரச்சனைகள் குணமாக, சைனஸ் நோய்கள் சார்ந்த பிரச்சனைகள் சரியாக, உடல் சுறுசுறுப்பு பெற, மலச்சிக்கல் பிரச்சனை சரியாக அகத்திக்கீரை உடலுக்கு நல்லது. இன்று அகத்திக்கீரையை சுவையனை பொரியல் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம். Cabbage Bonda Recipe: மொறுமொறுப்பான முட்டைகோஸ் போண்டா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..! 

அகத்திக்கீரை பொரியல் செய்யத் தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை - 2 கட்டு,

காய்ந்த வரமிளகாய் - 2,

நாட்டு வெங்காயம் - 24,

தேங்காய் துருவல் - 1 கப்,

உப்பு - தேவையான அளவு,

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு,

கடுகு & உளுந்து - 2 கரண்டி,

கறிவேப்பில்லை - சிறிதளவு,

உளுந்தம்பருப்பு - 3 கரண்டி,

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட நாட்டு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின் அகத்திக்கீரையை கிளைகள் நீக்கி எடுத்து, அரிசி கழுவிய நீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பின் அதனையும் பிடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

நறுக்கிய அகத்திக்கீரையை அரிசி களைந்த நீரில் வேகவைத்து, அதனை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். வாணெலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு-உளுந்து, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.

இவை வதங்கியதும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, இதனுடன் அகத்திக்கீரையை சேர்த்து கிளறவும். தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்துக்கிளறி இறக்கினால் சுவையான அகத்திக்கீரை பொரியல் தயார். இதனை சாதத்தில் பிசைந்தும், வெறுமையாகவும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.