டிசம்பர் 13. திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை மகா பரணி தீபத் (Karthigai Deepam 2024) திருவிழா, 13 டிசம்பர் 2024 இன்று வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணிக்கு வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. பௌர்ணமி தினத்தில் தீபத் திருவிழா நடைபெறும் என்பதால், திருவண்ணாமலையை நோக்கி பல இலட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரின் நாமத்தை உச்சரித்தபடி பயணம் மேற்கொள்ளதும் வழக்கம்.
பக்தர்களுக்கான வசதிகள்:
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலையை நோக்கி பயணம் செய்ய அரசு சார்பில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிகமாக ஒன்பது பேருந்து நிறுத்தங்களும் திருவண்ணாமலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக 16 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நகரின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம் 2024: உள்ளம் கவர்ந்தவருடன் கொண்டாடி மகிழுங்கள் - அசத்தல் கவிதையுடன் சிறந்த வாழ்த்துக்கள் இதோ.!
மாலை 6 மணிக்கு மகாதீபம்:
சிவ பக்தர்களிடையே மிக பிரம்மாண்டமாக அனுசரிக்கப்படும் கார்த்திகை தீபத் திருவிழா, பரணி நட்சத்திரத்தன்று கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் விழா ஆகும். இதனால் இது பரணி தீபம் என்றும் அழைக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்திருநாளில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில், மூலஸ்தானத்தில் விளக்கு ஏற்றப்பட்டு, பின் மாலை மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். பரம்பொருளில் இருந்து தோன்றும் அனைத்து பொருட்களும், இறுதியாக அவருடைய சரணாகதி என்பதன் இந்த தத்துவ நிகழ்ச்சியானது விளக்குகிறது. இந்த நாளில் மாலை 6 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்போது, ஒவ்வொரு வீடுகளிலும் தீபம் ஏற்றி அண்ணாமலையாரை வழிபாடு செய்யலாம்.
நன்கொடை வழங்கலாம்.
மேலும், பரிசுத்தத்தின் அடையாளமாக காணப்படும் நெய் நன்கொடையும் கோவில்களுக்கு செலுத்தலாம், இதற்கான நடைமுறைகள் ஆன்லைனில் இருக்கின்றன. அன்னதான நன்கொடை, பிற சேவைகள் செய்யவும் தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை https://hrce.tn.gov.in/hrcehome/index.php இணையப்பக்கத்தில் பதிவு செய்து வழங்கலாம்.
தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்துள்ள பக்தர்கள்:
#WATCH | Tamil Nadu: Drone visuals from Arulmigu Arunachaleswarar Temple, Tiruvannamalai. Karthigai Deepam festival will be celebrated here today
Karthigai Deepam or Karthika Deepam is one of the most ancient festivals of Tamil Nadu celebrated on the day of the full moon in the… pic.twitter.com/dlMj2iQJCs
— ANI (@ANI) December 13, 2024
இந்து சமய அறநிலையத்துறையின் பக்கத்தில், தீபத்திருவிழா நேரலையை காணலாம்:
🔴LIVE :திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா பரணி தீபம் pic.twitter.com/5WTV5BObG0
— TN HRCE (@tnhrcedept) December 12, 2024
கார்த்திகை தீபத்தின் நேரலையை, அறநிலையத்துறை பக்கத்தில் காணலாம். மதியம் 3 மணிக்கு மேல் அதற்கான புதிய பதிவு வெளியிடப்படும்.