
ஜூன் 11, சென்னை (Health Tips): இன்றளவில் ஞாபகம் மறதி என்ற நினைவாற்றல் இழப்பு பிரச்சனை காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை ஆங்கிலத்தில் அம்னீசியா என்று அழைப்பார்கள். அம்னீசியாவுக்கான முக்கிய காரணங்களாக பல விஷயங்கள் கூறப்படுகிறது. அந்த விஷயங்கள் குறித்து ஒவ்வொன்றாக விரிவாக தெரிந்து கொள்ளலாம். Chennai News: பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி கொன்ற தாய்.. அதிர்ச்சி வாக்குமூலம்.!
ஞாபக மறதி ஏற்படுவதற்கு காரணம் என்ன?
பக்கவாதத்தால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து நினைவாற்றலுக்கு பொறுப்பேற்கும் பகுதி சேதமாகி ஞாபக மறதி ஏற்படுகிறது. இது மூளையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும். காயங்கள் அல்லது விபத்துகளும் இதற்கு காரணமாக அமைகிறது. அதேபோல மூளையில் ஏற்படும் தொற்று, நீரிழிவு நோய் பாதிப்பு, மருந்துகளின் பக்க விளைவு, நீண்ட காலமாக மதுப்பழக்கம், வளர்ச்சிதை மாற்றம், தைராய்டு சுரப்பி, மன அழுத்தம் போன்றவையும் இந்த விஷயத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
சர்க்கரை நோயாளிகளை விட்டு வைக்காத ஞாபக மறதி :
சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரையில் ரத்த சர்க்கரை அதிகமாகும் போது மூளைக்கு செல்லக்கூடிய ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படும். இதனால் ரத்த நாளத்தில் நரம்புகள் சேதமாகி நினைவாற்றல் குறையும். ரத்த சர்க்கரை இருப்போருக்கு இன்சுலின் குறையும் என்பதால் மூளையில் இருக்கும் நரம்பு செல்கள் தூண்டப்பட்டு ஞாபக மறதி ஏற்படுகிறது. இந்த தரவுகள் சமீபத்திய ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சர்க்கரை நோயாளிகள் தங்களது நினைவாற்றலை மேம்படுத்த மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாபக மறதியை தவிர்ப்பது எப்படி?
காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதன் காரணமாக இந்த பிரச்சனை தவிர்க்கப்படும். மீன், வால்நட் போன்றவையும் நல்ல பலனை அளிக்கும். அதே நேரத்தில் உடற்பயிசி, நடை பயிற்சி போன்றவை நல்லது. உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தையும் கைவிட்டு ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணிநேரம் உறங்குவது நல்லது.