World Radiography Day (Photo Credit: LatestLY)

நவம்பர் 08, சென்னை (Special Day): இன்றைய மருத்துவ உலகத்தில் நோயின் தன்மையை அறிய பெரிதும் பயன்படக் கூடியது x-RAY. விபத்து, எலும்பு முறிவு என்றால் மருத்துவர் பரிந்துரைக்கும் முதல் பரிசோதனை 'எக்ஸ்-ரே' தான். இதுதவிர, முழு உடல் பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பை கண்டறிய 'எக்ஸ்-ரே' பரிந்துரைக்கப்படும். இதனாலேயே, மக்களிடையே பரிச்சயமான பரிசோதனையாக மாறிவிட்டது ‘எக்ஸ்-ரே’. இத்தகைய பெருமை வாய்ந்த ‘எக்ஸ்-ரே’ கண்டுபிடித்த நாளின் நினைவாகவும், மருத்துவப் படிமவியலின் பயன்களை அறியச் செய்தவதற்காகவும் வருடந்தோறும் உலக ‘எக்ஸ்-ரே’ தினம் அல்லது உலக கதிரியக்க தினம் (World Radiography Day) கடைபிடிக்கப்படுகிறது. Infant Protection Day 2024: குழந்தை பாதுகாப்பு தினம்.. உங்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு இது கட்டாயம்.!

வரலாறு: ஜெர்மனியைச் சேந்த விஞ்ஞானி வில்ஹெல்ம் கான்ராட் 1895ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, எதிர்மின் கதிர்களால் அருகே இருந்த ஃபெரினோ பிளாட்டினோ சயனைடு பூசப்பட்டிருந்த அட்டையானது ஒளிர்வதைக் கண்டுபிடித்தார். இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத கதிர்கள் தான் காரணம் என்று கண்டுபிடித்தார். அதன் பண்புகள் பற்றி தெரியாததால் எக்ஸ் கதிர்கள் என்று பெயர் வைத்தார். இந்த x-RAY கண்டுபிடிப்பிற்காக 1901ல் உலகின் இயற்பிலுக்கான முதல் நோபல் பரிசு வில்ஹெல்ம் கான்ராட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த நாளே உலக கதிரியிக்க தினம் கொண்டாடப்படுகிறது.