World Ranger Day (Photo Credit: Team LatestLY)

ஜூலை 31, புதுடெல்லி (New Delhi): உலகம் முழுவதும், வனவிலங்கு பூங்கா ரேஞ்சர்கள் நமது இயற்கை பாரம்பரியத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் முன்னணியில் உள்ளனர். இவர்கள் காட்டில் ஏதேனும் உயிரினம் பாதிக்கப்பட்டா சிறிதும் தயங்காமல் உயிரை பிணையம் வைத்து அதனை காக்கின்றனர். இப்படிப்பட்ட இவர்களை சிறப்பிக்கும் வகையில் உலக ரேஞ்சர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 அன்று கொண்டாடப்படுகிறது. மேலும் பணியின் போது காயமடைந்த அல்லது கொல்லப்பட்ட ரேஞ்சர்களை நினைவுகூரும் வகையில் உலக ரேஞ்சர் தினம் கொண்டாடப்படுகிறது. International Friendship Day 2024: "எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு" சர்வதேச நட்பு தினம்..!

வரலாறு: உலக ரேஞ்சர் தினம் (World Ranger Day) சர்வதேச ரேஞ்சர் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்டது. மேலும் முதன்முதலில் 2007 இல் கொண்டாடப்பட்டது. பூங்கா காவலர்கள் முன்பை விட அதிக ஆபத்துக்களை எதிர்கொள்வதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. பூங்கா காவலர்கள் மீதான தாக்குதல்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளன. எனவே வனவியல் பூங்காக்களை காக்கும் ரேஞ்சர்களை கொண்டாடுவோம்.