Quail (Photo Credit: Pixabay)

மார்ச் 06, சென்னை (Chennai News): தமிழகத்தில் காடைகள் வளர்க்கப்பட்டு சென்னை, டெல்லி பெங்களூரு, மதுரை, திருச்சி மற்றும் கோவை போன்ற பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. கோழி வளர்ப்பை விட காடைகளை வளர்த்து விரைவிலேயே அதிக லாபம் ஈட்ட முடியும். காடை வளர்ப்பிற்கு குறைந்த முதலீடே தேவைப்படும். காடைகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகம். மேலும் தீவன செலவும் குறைவு. கோழிகளுக்கு போன்று இவைகளுக்கு தடுப்பூசிகள் அளிக்க தேவையில்லை. காடைகளை 5 முதல் 6 வாரங்களிலேயே விற்பனை செய்யலாம்.

காடை வகைகள்:

நியூசிலாந்து காடை, பாப் வெள்ளைக் காடை, சைனாக் காடை, மாடகாஸ்கர் காடை, கலிபோர்னியா காடை, நியூகினியா காடை என பல வகைகளில் காடைகள் இருகின்றனர். ஆனால் இந்தியாவில் அதிகளவில் ஜப்பானியக் காடை வகைகள் தான் வளர்க்கப்படுகின்றன.

 

ஜப்பான் காடை வளர்ப்பு:

பிற காடை இனங்களை விட ஜப்பான் காடை வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டலாம். இந்த காடைகள் அதிகளவில் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. ஜப்பானிய காடைகளை மிகக் குறைந்த இடத்தில் அதிக காடைகளை வளர்க்க முடியும். ஜப்பானிய காடைகள் ஆறு வாரத்திற்கு 500 கிராம் அளவே தீவனம் உட்கொள்வதால் தீவன செலவு குறைவான அளவே வரும். மேலும் இந்த காடையில் அதிக புரதமும், குறைந்த அளவு கொழுப்பும் உள்ளது. வளர்ந்த காடை ஒன்று 150 முதல் 200 கிராம் வரை உடல் எடைக் கொண்டது.

பெண் காடை 6ஆம் வாரத்திற்கு மேல் தினமும் முட்டையிடத் தொடங்கும். முதல் ஆண்டில் 300 முட்டைகளையும், 2ம் ஆண்டில் 150-175 வரை முட்டையிடும். முட்டைகளிலிருந்து 17வது நாளில் குஞ்சுகள் பொரிக்கும்.

ஆழ்கூள முறை

ஜப்பான் காடைகளை ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். இதில் ஒரு சதுர அடியில் ஐந்து காடைகள் வரை வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம்.

ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேல் காடைகளை வளர்த்தால், பெரிய இடத்தில் இருப்பதால் அவைகளுக்கு அதிகம் சக்தி தேவைப்படும். இதனால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. தீனமும் அதிகம் தேவைப்படலாம். காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு தனித்தனிக் கூண்டுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும். Red Light Areas In India: பாலியல் தொழிலை முதன்மை தொழிலாக கொண்டவர்கள்.. விவரம் இதோ..!

கூண்டு முறை வளர்ப்பு

இறைச்சிக்காக வளர்க்கும் காடைகளை, 3 அடி நீளமும், 2 ½ அடி அகலமும் உள்ள கூண்டுகளில் முதல் இரு வாரங்களுக்கு வளர்க்க வேண்டும். கூண்டு ஒன்றுக்கு 100 காடைக் குஞ்சுகள் வரை வளர்த்துப் பின் அவற்றை 3-6 வாரம் வரை 4 அடி நீளம் இரண்டரை அடி அகலம் 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில், கூண்டிற்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.குஞ்சுப்பருவத்தில் உள்ள காடைகளுக்கு கூண்டுகள் ஒவ்வொன்றும் 20 செ.மீ உயரம் இருத்தல் வேண்டும்.

அடுக்கடுக்கான கூண்டின் அடிப்பகுதியில் தகடுகளை வைக்க வேண்டும். அப்போது தான் மேல் அடுக்கில் உள்ள காடைகளின் கழிவு கீழ் அடுக்கில் உள்ள காடைகளின் மீது விழாமல் இருக்கும். இந்தத் தகடுகளில் விழும் கழிவுகளை தினந்தோறும் அகற்றும் படியாக கூண்டுகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு கூண்டும் 4 அல்லது 5 அடுக்குகள் கொண்டவையாக அமைத்துக் கொள்ளலாம்.

குஞ்சு பருவக் கூண்டுகளை 90 செ.மீக்கு 60 செ.மீ (3க்கு 2 அடி) என்ற அளவில் உள்ள பிரிவுகளாக அமைக்கலாம். இந்தக் கூண்டில் 100 காடைகளை இரண்டு வாரம் வரை வளர்க்கலாம். விற்பனை ஆகும் வரை காடைகளின் அளவைப் பொருத்து கூண்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

காடைத் தீவனம்

காடைகளுக்கு கோழிக்கு அளிக்கும் தீவனங்களையே அளிக்கலாம். காடை குஞ்சுப் பருவத்தில் வழங்கும் தீவனத்தில் 26-28% புரதமும், 2700கி கலோரி எரிசக்தியும் கொண்டதாக இருக்கவேண்டும். இதை முதல் 6 வாரங்களுக்கு காடைகளுக்கு அளிக்க வேண்டும். முதல் மூன்று வாரங்கள், 24% புரதமும், 2800கி கலோரியும் கட்டாயம் அளிக்க வேண்டும். காடைகளுக்கென்று தனியாக தீவனமும் கிடைக்கிறது. சரியாக ஊட்டச்சத்துக்கள் காடைகளுக்கு சேராவிடின் நோய்களால் பாதிப்படைந்து இறந்து விடும்.

காடைகள் 7 வயதிற்கு மேல் முட்டையிட ஆரம்பித்துவிடும். காடை முட்டைகளை எடுத்து அடை வைத்த 18 ஆவது நாள் குஞ்சுகள் பொரித்து விடும். வாரத்திற்கு 500 பெண் காடைகளில் 1500 காடைக் குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். பருவ காலத்திற்கு ஏற்ப முட்டைகளை அடை வைக்க வேண்டும்.

காடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அவைகளுக்கு அதிகளவில் வெப்பம் தேவைப்படும். குறைவான வெப்பம் இருந்தால் அவைகள் ஒன்றோடு ஒன்று ஏறி முச்சு திணறல் ஏற்பட்டு இறந்துவிடும். குளிர்ந்த சூழ்நிலையில் காடைக் குஞ்சுகளை வைக்க கூடாது.

நோய் தொற்றுகள்

தொப்புள் அழற்சி, ஈகோலி நோய், காடைக்கழிச்சல் மற்றும் காளான் நோய்கள், நுரையீரல் அழற்சி, பூசண நச்சு போன்ற நோய்கள் வரும். மேலும் மேரெக்ஸ் வாத நோய், இராணிக்கெட் கழிச்சல் நோய் போன்ற வைரஸ் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களும், காக்சிடியோசிஸ் எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் காடைகளைப் பாதிக்கலாம்.

ஆனால் கோழிகளை போன்றில்லாமல், காடைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகமுள்ளதால், நோய்களை அவைகளே சரி செய்து கொள்ளும் தனியாக கவனிக்க வேண்டிய அவசியமில்லை. சரியான ஊட்டச்சத்துக்களே இவைகளுக்குப் போதுமானதாகும்.

காடைகளை சிறிய வயதிலிருந்தே, சுத்தமான தண்ணீர், நல்ல ஊட்டசத்துள்ள உணவு, மற்றும் சுகாதாரமான இடமும் சரியான வெப்பனிலையும் இருந்தால் காடைஅக்ள் ஆரோக்கியமாக எந்த இழப்பும் இன்றி வளரும்.