Couple Birth Control Tips (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 28, டெல்லி (Delhi News): உலகில் உள்ள பழமையான தொழில்களில் ஒன்றாக விபச்சாரம் உள்ளது. இந்த முறை இந்தியாவில் வழக்கத்தில் இருந்து வந்தது. உடலுறவு செய்து பணம் ஈட்டுவது பல நாடுகளில் குற்றமாக கருத்தப்படுகிறது. இந்தியாவில் பாலியல் தொழில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாக கருதப்படாது. ஆனால் ஒருவரின் விருப்பம் இல்லாமலும், வலுக்கட்டாயமாகவும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். விபச்சார விடுதிகள் நடத்துவது, பணத்திற்கு பெண்களை பாலியல் தொழிலில் விற்பது போன்றவையே குற்றங்களாகும். மேலும் பாலியலைப் பயன்படுத்தி சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடக் கூடாது. விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்காக ஒழுங்குமுறை அல்லது பாதுகாப்பிற்கு சட்டங்கள் தனியாக இல்லை. இந்தியாவில் ரெட் லைட் ஏரியாக்கள் என சொல்லப்படும் விபாச்சாரம் செய்யும் பகுதிகள் ஏராளம் உள்ளது. இவைகள் வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிந்த பகுதிகளாகவே இருந்து வருகிறது. இணையதளத்தில் விளாக் செய்து போடும் அளவிற்கு பிரபலமாக உள்ளன.

சொனகாச்சி

கொல்கத்தாவில் உள்ள சொனகாச்சி என்ற பகுதி இந்தியாவின் மிகப்பெரிய ரெட் லைட் ஏரியாவாக இருப்பதுடன், ஆசியாவில் உள்ள மிகப்பெரிய ரெட் லைட் ஏரியாவாகவும் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இதில் தற்போது 11ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் பிரபலமான விபாச்சரப்பகுதியான் இந்த் சொனகாச்சியைப் பற்றி புத்தகங்கள் வெளிவந்திருகின்றன. பிரபலமான ஆவணப்படமான ‘ப்பான் இண்டூ ப்ராத்தல்’ இங்கு படமாக்கப்பட்டதே.

காமாத்திபுரம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய விபச்சார பகுதியாக இருந்தாலும் இவ்விடம் அனைவருக்கும் தெரிந்த இடமாக இருந்து வருகிறது. மும்பையில் உள்ள இந்த காமாத்திபுரம் மிகப்பழமையான விபச்சாரப் பகுதியாகும். இதை 1975 காலங்களில் பிரிட்டிஷ் அரசால் ‘லாப் பஜார்’ என்று அழைக்கப்பட்டது. இந்த பகுதியில் 1992ல் 45,000க்கும் பேற்பட்டோர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருகின்றனர். மேலும் 2022ல் ஆலியா பட்டின் நடிப்பில், காமாத்திபுரத்தில் இருந்த விபச்சாரம் செய்யும் பெண் மற்றும் சமூக ஆர்வலரான கங்குபாய் காத்தியாவட்டின் வாழ்கை வரலாறு திரைப்படமாக வெளியானது. First Night Tips: உங்கள் முதலிரவு... இனிய இரவாக... தாம்பத்ய வாழ்க்கைக்கான விதிகள தெரிஞ்சிக்கோங்க.!

ஃபோராஸ் ரோடு

மும்பையின் லைக்னோ, மோரடாபாத், ஆக்ரா, ராத்லம், போபால் போன்ற பகுதிகளில் இருந்து பலரும் இங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த பகுதியில் இரவு நேரங்களில் லேடீஸ் பார்களிலும், பப்களிலும் முஜ்ரா எனப்படும் கவர்ச்சி நடன நிகழ்ச்சிகள் அதிக அளவும் நடைபெறும்.இந்த இடமே முஜ்ராவிற்கு பிரபலமாக உள்ளது. இந்த மாதிரி பார்கலுக்கு அதிக வாடிக்கையாளர்களும் இருந்து வருகின்றனர்.

புத்வார்பேட்

புனாவில் உள்ள 5000 பேர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது இந்தியாவின் 3வது பெரிய ரெட் லைட் ஏரியாவாக இருக்கிறது. மேலும் 700 மேல் விபச்சார விடுதிகள் உள்ளது. மேலும் இந்தியாவின் பாதுகாப்பான விபச்சாரப் பகுதியாக இருக்கிறது. ரெட் லைட் ஏரியாக்களில் அதிகளவில் ஆணுறைகளை பயன்படுத்தும் பகுதியாக இருந்து வருகிறது.

மீர்கஞ்ச்

அலகாபாத்தில் உள்ள மீர்கஞ்ச் விபச்சார பகுதி சற்று ஆபத்தான பகுதியாக உள்ளது. படங்களில் காட்டுவது போல ரவுடிகள் இருப்பது, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற்வை இங்கு நடந்து வந்தது. இதற்கு எதிராக சுனில் சௌத்திரி என்னும் சமூக ஆர்வலர் வழக்கு தொடர்ந்ததையடுத்து அலகாபாத் நீதிமன்றம் இந்த பகுதியை மூடி வேறு இடத்திற்கு குடிபெயர உத்தரவிட்டது. சிறிது காலத்திற்கு பின் இந்த இடத்திற்கே மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் திரும்பிவிட்டனர்.

கார்ஸ்டின் பேஷன் சாலை

டெல்லியில் உள்ள கார்ஸ்டின் பேஷன் சாலையில் உள்ள இந்த பகுதி மிகப் பெரிய விபச்சாரப் பகுதியாக இருந்து வருகிறது. இரும்பு பட்டறைகளும் வாகன உதிரி பாகங்கள் கிடைக்கும் இடமாக இருக்கும் இப்பகுதி இரவில் விபச்சாரப் பகுதியாக இருக்கிறது. மேலும் இப்பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கவும் அவர்களின் குடும்பத்திற்காகவும் முதன் முதலில் சுகாதர நிலையம் ஆரம்பிக்கப்பட்டும் உள்ளது.

பஹர்கஞ்ச்

நியூ டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள இப்பகுதி குறைவான விலைக்கு பெண்கள் மற்றும் பார்கள் கிடைக்கும் விபச்சாரப் பகுதியாக இருக்கிறது. மேலும் இப்பகுதியில் ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் குறைவான விலையில் மசாஜ் செய்யும் விளம்பரப் போஸ்டகளும் இப்பகுதி முழுவதும் குவிந்து கிடக்கிறது. அதிகமாக மசாஜ் பார்லர்கள் இருக்கும் இப்பகுதிக்கு பலரும் செல்லவதை வாடிக்கையாக் கொண்டுள்ளனர்.

சதுர்புஜஸ்தான்

பீகார் மாநிலத்தின் அமைந்துள்ள இந்த சதுர்புஜஸ்தான் பகுதியில் 3500 மேல் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் இருக்கின்றனர். இப்பகுதியில் முகலாயக் காலத்திலிருந்தே இத்தொழில் நடந்திருக்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சதுர்புஜஸ்தான் என்னும் பெயரே உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மிக குறைந்த விலையில் அறைகள் கிடைப்பதுமே இதன் சிறப்பாகவும் உள்ளது.

சிவதாஸ்பூர்

உத்திர பிரதேசத்தின் வாரணாசியில் அருகில், டாலமண்டி என்னும் மாவட்டத்தில் இந்த பகுதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் கோவிலிற்கு அருகில் அமைந்திருந்ததை 1970களில் சிவதாச்பூரிற்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இங்கு அதிக மக்கள் தொகையும் உண்டு. பாலின நோய்களின் பயத்தின் காரணமாக இங்கு வாடிக்கையாளர்கள் குறைந்து, இவர்களில் தொழில் பாதிக்கப்பட்டது. இந்த பகுதியை மூடுவத்ற்கு உள்ளூர் மற்றும் அரசியல்வாதிகள் போராடி வருகின்றனர்.

கர்நாடகா

கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி மற்றும் கொப்பல் என்னும் மாவட்டங்களில் அதிகமாக விபச்சாரம் நடைபெற்று வருகிறது.

தேவதாசி முறை தென் இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழக பகுதியிலும் இருந்தது. இந்த முறை பல பரிணாமங்களில் அறியப்படுகிறது. இம்முறை தற்போது இல்லாவிடினும் கர்நாடகாவில் தேவதாசி சமூகத்தில் உள்ள பெண்கள் விபசாரத்தில் இறக்கி விடப்படுகின்றனர். கேரளாவும் பாலியல் தொழிலில் பிரபலமாக இருந்தது. தற்போதும் கேரளா, தமிழகத்தில் அங்காங்கு பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது.