
பிப்ரவரி 19, சென்னை (Kitchen Tips): குழம்போ ரசமோ இல்லை.பண்ணுவதற்கும் நேரமில்லை.பருப்புத் துவையல் தேங்காய்த் துவையலெல்லாம் போரடிக்கும். என்ன செய்யலாம்? வீட்டில் காலையில் நறுக்கிய சௌசௌ தோல் வைத்திருந்தீர்கள் என்றால் இதோ புதுவகையான துவையல் ரெடி.
தேவையான பொருட்கள்:
சீவி வைத்திருந்த சௌசௌ தோல்
உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீ ஸ்பூன்
வரமிளகாய் - 3
புளி நெல்லிக்காயளவு
கட்டிப் பெருங்காயம், தேங்காய்த் துருவல் - சிறிதளவு Variety Rice Recipe: சுவையான வெரைட்டி ரைஸ் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
சௌசௌ தோலை எண்ணெயில் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.பருப்பு,மிளகாய், எல்லாவற்றையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பருப்பு வகைககள்,மிளகாய்,சௌசௌ தோல் ஆறியதும் தேங்காய்,பொறித்த பெருங்காயம்,புளி எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துத் தேவையான உப்பு சேர்த்து,கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்துவிடுங்கள். மணக்க மணக்க சௌசௌ தோல் துவையல் ரெடி.