Lemon Rice (Photo Credit: YouTube)

பிப்ரவரி 17, சென்னை (Kitchen Tips): வெரைட்டி ரைஸ் பிரியர்களுக்காக பலவிதமான ரெசிபிகள் உள்ளன. அந்தவகையில், வீட்டிலேயே சுவையான வெரைட்டி ரைஸ் எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Chapathi Gravy Recipe: சப்பாத்திக்கு ஏற்ற சுவையான கிரேவி செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கப்

தேங்காய் பால் - 3 கப்,

நெய், எண்ணெய் - ஒன்றரை கரண்டி

சீரகம் - ஒரு கரண்டி

முந்திரி - 50 கிராம்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 4

புதினா, கொத்தமல்லி, பச்சை பட்டாணி, உப்பு - சிறிதளவு

செய்முறை:

சட்டியில் நெய்யும் எண்ணெய்யும் சேர்த்து சூடாக்கவும் அதில் சீரகத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் நீளவாக்கில் நறுக்கிக் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். நீளவாக்கில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி , இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்க்கவும். கழுவிய பாஸ்மதி அரிசி,, முந்திரிப் பருப்பு,

பச்சைப் பட்டாணி, தேங்காய் பால் இதில் சேர்க்கவும். மெதுவாக கிளறவும். அடுப்பை லேசான சூட்டில் பத்து நிமிடங்கள் வைக்கவும். இடையில் இரண்டு தடவை கிளறவும். இறக்கும் முன்பு பொடிசாக நறுக்கிய கொத்தமல்லியை சிறிது தூவவும். பத்தே நிமிடத்தில் வெரைட்டி ரைஸ் ரெடி.