மார்ச் 05, சென்னை (Kitchen Tips): பனியாரம் பிரியர்களுக்காக பலவிதமான ரெசிபிகள் உள்ளன. அந்தவகையில், வீட்டிலேயே அருமையான தேங்காய் பால் பனியாரம் எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் இரண்டு கப்
உளுந்து மாவு
தண்ணீர் சிறிதளவு
சர்க்கரை தேவைக்கு
பொரிக்க கடலை எண்ணெய் Uppu Kolukkattai Recipe: சுவையான உப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
முதலில் உளுந்தை மூன்று மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைத்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் உளுந்து மாவை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்க வேண்டும். துருவி வைத்திருக்கும் தேங்காயை மிக்ஸியில் போட்டு அதோடு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும் அரைத்து எடுத்த பின் அதை பிழிந்து எடுக்க வேண்டும். பொடித்து வைத்திருக்கும் பனியாரத்தை தேங்காய்ப் பாலில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு எடுத்து பரிமாறவும்.