
பிப்ரவரி 28, சென்னை (Kitchen Tips): கொழுக்கட்டை பிரியர்களுக்காக பலவிதமான ரெசிபிகள் உள்ளன. அந்தவகையில், வீட்டிலேயே சுவையான உப்பு கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்:
மாவு - 2 கப்
துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
உப்பு - சிறிதளவு Mangai Sadam Recipe: சுவையான மாங்காய் சாதம் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
செய்முறை:
இந்த உப்பு பிடி கொழுக்கட்டை செய்வதற்கு ஒரு கப் அளவு பச்சரிசி மாவை எடுத்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த மாவில் சிறிதளவு உப்பு இரண்டு ஸ்பூன் சூடான நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நன்கு கொதிக்க வைத்த வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இதனை கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சீரகம், கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு வர மிளகாய் ஆகியவற்றை தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்த பிறகு இதனை அப்படியே மாவில் கொட்டி விடவும்.
ஒரு மூடி தேங்காயை துருவி தேங்காய் பூவை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த இந்த மாவை நீளவாக்கில் உருட்டி விரல் பதியும்படி பிடி கொழுக்கட்டையாக பிடித்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து இட்டலி தட்டில் இந்த பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான பிடி கொழுக்கட்டை தயார்!