SDV (Photo Credit: Pixabay)

ஜூலை 09, புதுடெல்லி (New Delhi): குறுவை நெல் சாகுபடியில் (Short Duration Varieties) உயர் விளைச்சல் பெற விதை பரிசோதனை அவசியம். தரமான விதைகளின் குணாதிசயங்களான நல்ல முளைப்புத் திறன், பிறரக கலப்பு இல்லாமை, தூய்மை மற்றும் பூச்சி நோய் தாக்கம் இல்லாத விதைகளாக தேர்ந்தெடுத்து விதைத்தல் அவசியமாகும். நடப்பாண்டில் குறுவை பருவத்திற்கேற்ற நெல் இரகங்கள் அவற்றின் குணாதிசயங்கள் மற்றும் விதைப்பரிசோதனை முறைகள் குறித்து இப்பதிவில் காணலாம்.

குறுவை பருவத்திற்கேற்ற நெல் ரகங்கள்:

ஆடுதுறை 36:

வயது : 110 நாட்கள்

பண்புகள் :வறட்சியைத் தாங்கும் தன்மை, குருத்துப்பூச்சி மற்றும் குலைநோய்க்கு எதிரான நடுத்தர எதிர்ப்புத் திறன். வெள்ளை நிற நடுத்தர சன்ன அரிசி.

விளைச்சல் : ஹெக்டருக்கு 6 டன் Thangalaan Trailer Release Date: தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு.. நடிப்பு அரக்கன் விக்ரமின் ஆட்டம் ஆரம்பம்..!

ஆடுதுறை 37:

வயது : 105 நாட்கள்

பண்புகள் : குலைநோய், இலைப்புள்ளி நோய், புகையான், பச்சைத் தத்துப்பூச்சி, ஆணைக் கொம்பன், இலைச் சுருட்டும் புழு ஆகியவைகலை எதிர்க்கும் திறன் கொண்டது.

விளைச்சல் : ஹெக்டருக்கு 6.2 டன்

ஆடுதுறை 43:

வயது : 110 நாட்கள்

பண்புகள் : குருத்துப் பூச்சி, ஆணைக் கொம்பன் ஆகியவையை எதிர்க்கும் திறன் உடையது.

விளைச்சல் : ஹெக்டருக்கு 5.5 டன்

ஆடுதுறை 46:

வயது : 140 நாட்கள்

பண்புகள் : புகையான், பச்சைத் தத்துப்பூச்சி, இலைச் சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் ஆகியவற்றை எதிர்க்கும் திறன் உடையது.

விளைச்சல் : ஹெக்டருக்கு 6.5 டன் Live Rat Found In Chutney: சட்னியில் மிதந்த உயிருள்ள எலி.. பீதியை கிளப்பும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்..!

ஆடுதுறை 53:

வயது : 110 நாட்கள்

பண்புகள் : குலைநோய், இலையுறை அழுகல் நோய், இலைச் சுருட்டுப்புழு மற்றும் புகையான் ஆகியவற்றை எதிர்க்கும் நடுத்தர எதிர்ப்புத்திறன் உடையது.

விளைச்சல் : ஹெக்டருக்கு 6.3 டன்

கோ 51:

வயது : 105 முதல் 110 நாட்கள்

பண்புகள் : வெள்லை நிற மத்திய சன்ன அரிசி, குலைநோய், பச்சை தத்துப்பூச்சி ஆகியவற்றை எதிர்க்கும் நடுத்தர எதிர்ப்புத்திறன் உடையது.

விளைச்சல் : ஹெட்டருக்கு 6.6 டன்