
பிப்ரவரி 06, சென்னை (Agri Tips): வெண்டை பயிருக்குத் தேவையான ஊட்டத்தை அளித்து வெண்டைக்காயில் அதிக லாபம் ஈட்ட முடியும் எனக் கூறுகிறார் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி நீலமேகம். சிறந்த மண் வளமும் அதிக ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கும் பட்சத்தில் குறுகிய கால பயிரான வெண்டைக்காய் லாபகரமான பயிராக இருக்கும் என உறுதியளிக்கிறார். வெண்டையின் தேவை அதிகமிருப்பதால் தனிப்பயிராக வெண்டையை விளைவிக்கலாம். 2 வருடங்களுக்கு மேலாக வெண்டை சாகுபடி செய்து வரும் இவர், இப்பயிர் குறித்து விவரிக்கிறார்.
நடவு முறை:
வெண்டையை பயிரிட நினைப்பவர்கள் முதலில் சிறிய இட அளவில் தொடங்கலாம். மண் வளத்திற்கு ஏற்பவே ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். அனைத்து வெண்டைகளுக்கும் அனைத்து மண்ணும் உகந்ததாக இருக்காது. மண் வளம் நன்றாக இருக்குமேயானால் உரங்கள் தேவைப்படாது. சத்துக்களை குறைவாக இருந்தால் மகசூல் பாதிக்கும், அதற்கு தொழுவுரம் சேர்த்து நன்கு ஆழ உழவு செய்ய வேண்டும். பின் 3 அடி இடைவேளையில் பாத்தி முறையில் 1 அடி இடைவேளையில் வெண்டை விதைகளை நடவு செய்து, தண்ணீர் அளிக்க வேண்டும். அடர் நடவு செய்யலாம் பக்க கிளைகள் வளர இடம் விட்டு நடவு செய்தால் மகசூல் அதிகமாகும். வாரம் ஒரு முறை அல்லது இரு முறை தண்ணீர் அளிக்க வேண்டும். மண்ணில் ஈரப்பதம் இருக்குமாறு இருந்தால் போதுமானது. 60 செண்டிற்கு 1 கிலோ வெண்டை விதைகளை நடவு செய்யலாம். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: மிதுன ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
களையும் உரமும்:
நடவுசெய்த 15 நாட்களுக்கு பிறகு முதல் களை எடுக்க வேண்டும். களை எடுத்த பின் கண்டிப்பாக பயிர்களுக்கு உரங்கள் அளிக்க வேண்டும். நல்ல தரமான சத்துக்களை பயிர்களுக்கு அளிக்க வேண்டும். பின் அடிக்கடி செடிகளுக்கு களையை எடுத்து உரங்கள் அளிக்க வேண்டும். வெண்டையில் அஷ்வினி பூ, நாற்புழு, சாம்பல் வண்டு என பூச்சித் தாக்கம் இருக்கும். வெண்டையில் பூச்சி தாகுவதால் வைரஸ் பாதிப்புகளும் ஏற்படும் மகசூல் இழப்பு ஏற்படும். ஆனால் அவைகளை ஆரம்பத்திலேயே பூச்சி விரட்டிகள் மூலம் அழித்துக் கட்டுப்படுத்தலாம்.
இது 3 முதல் 4 மாத பயிராகும். நடவு செய்த 30 நாட்களுக்கு மேல் பூக்கள் வெளிவரத் தொடங்கி விடும். பின் 40 நாட்களில் காய்கள் காய்த்து அறுவடைக்கு தயாராகி விடும். பின் ஒரு நாட்களுக்கு ஒரு முறை காய்களை பறிக்க வேண்டும். பெரிய அளவில் சாகுபடி செய்பவர்கள், தினமும் பறித்து விட வேண்டும். பகுதி பகுதியாக பறிப்பு மேற்கொள்பவர்கள், அனைத்து பகுதியை முழு அறுவடை செய்வதை ஒரு அறுப்பு எனலாம் ஒரு அறுப்பு முடிந்ததும் மீண்டும் உரம் வைத்து தண்ணீர் விட்டு அடுத்த அறுப்புக்கு தயார்படுத்தலாம். இது 15 முதல் 17 வரை அறுப்புகள் மேற்கொள்ளலாம். சரியான ஊட்டமும் பாராமரிப்பும் இருந்தால், 30 செண்டில் நாள் ஒன்றுக்கு 150 முதல் 180 கிலோ வரை மகசூல் கிடைக்கும். குறைந்தபட்சமாக கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். சில சமயங்களில் இதன் மகசூல் குறையவும் செய்யும். இருந்தாலும் இது லாபத்தை பெற்றுத் தரும்.