ஆகஸ்ட் 06, சென்னை (Kitchen Tips): வீட்டில் வாங்கி வைத்திருக்கும் முட்டைகளை (Egg) எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக முட்டையை வைத்து எப்படி முட்டை புர்ஜி (Egg Bhurji) செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம். இதனை கண்டிப்பாக முட்டை என்றால் வேண்டாம் சொல்லும் -- குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 ஸ்பூன்
சீரகத்தூள் -1/2 ஸ்பூன்
மல்லித்தூள் -1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - தேவைக்கேற்ப Pasi Paruppu Payasam Recipe: சுவையான பாசிப்பருப்பு பாயாசம் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
செய்முறை:
முதலில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து பொரிய விடவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மல்லித் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பின்பு சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு அதனுடன் அடித்து வைத்த முட்டையை சேர்த்து நன்கு வதக்கவும். இரண்டு நிமிடம் சூட்டில் கிளறவும். அவ்வளவுதான் சுவையான முட்டை புர்ஜி ரெடி.