Eggplant (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 02, புதுடெல்லி (New Delhi): இயற்கை முறையில் விவசாயம் செய்யும் போது மண் வளம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. மண்ணில் அனைத்து சத்துகள் இருந்தால் தான் விளைச்சல் அதிகரிக்கும். அதோடு காய்களும் சத்துள்ளவையாக இருக்கும். அதனால் மண்ணை எப்போதும் வளமாக வைத்திருக்க வேண்டும் என தொடங்கி கத்தரி சாகுபடி (Eggplant Planting Tips) குறித்து விவரிக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம் மைகில்பட்டியை சேர்ந்த விவசாயி ஜான் இம்மானுவேல். இவர் 2 ஏக்கரில் மணப்பாறை கத்தரி, வேலூர் முள் கத்தரி போன்ற 3 வகை கத்தரிகளை ஒரே நிலத்தில் பயிர் செய்து வருகிறார்.

கத்தரி நடவு: மார்கழி மற்றும் பங்குனி பட்டம் கத்தரி பயிருக்கு சிறந்ததாகும். கத்தரிக்கு (Eggplant Cultivation) நல்ல மண் வளம் தேவைப்படுகிறது. அதனால் மண்ணை ஆழ உழுது, ஏக்கருக்கு 20 டன் எருவை அடியுரமாக இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும். கத்தரி செம்மண், வண்டல் மண் போன்ற தண்ணீர் தேங்காத மண்ணில் நன்றாக வளரும். ஏக்கருக்கு அடர் நடவில் 6,000 செடிகளை நடவு செய்யலாம். மண்ணில் சத்துக்கள் அதிகம் இருந்தால் 7,000 செடிகள் வரை அடர் நடவு செய்யலாம். கத்தரி செடிகள், 3:3 அல்லது 4:4 என்ற இடைவேளியில் நடவு செய்யலாம். கத்தரியை, வாழைகளுக்கு நடுவில் ஊடு பயிராகவும் ஒரு வரிசையில் நடவு செய்யலாம். கத்தரி நடவு செய்கையில் செண்டுமல்லியை ஊடு பயிராக நடவு செய்து, அசைவ பூச்சிகளை ஈர்த்து கத்தரியைத் தாக்கும் சைவ பூச்சிகளை எளிதில் அழிக்கலாம் என ஆலோசனை கூறுகிறார் ஜான். World Coconut Day 2024: உலக தேங்காய் தினம்.. அதன் நன்மைகள் என்னென்ன தெரியுமா?!

தண்ணீரும் களையும்: மண் தண்ணீரை உறிஞ்சும் திறனைப் பொருத்து 4 நாட்கள் அல்லது 8 நாட்களுக்கு ஒரு முறை செடிகளுக்கு தண்ணீர் அளிக்க வேண்டும். ‘காயவும் பாயவும்’ முறையில் தண்ணீர் அளிக்க வேண்டும். நடவு செய்ததிலிருந்து 15 நாட்கள் பிறகு முதல் களை எடுக்க வேண்டும். பின் 40 ஆவது நாளில் மறுகளை எடுக்க வேண்டும். பின் 60ஆவது நாளில் செடிகளுக்கு பார் கட்ட வேண்டும். அதாவது செடிகளுக்கு மண்ணை அணைத்து விட வேண்டும். கண்டிப்பாக 2 களைகளை கத்தரி செடிகளுக்கு எடுக்க வேண்டும்.

பூச்சி: கத்தரிக்கு மாவுபூச்சி, மஞ்சள் சாறு உறிஞ்சும் பூச்சி, வெள்ளை ஈ, பச்சை மற்றும் கருப்பு தட்டு பூச்சிகள் போன்ற கத்தரிக்கு வரும். இவைகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். இந்த பூச்சிகள் தான் தண்டுத் துளைப்பானாகவும், பிற நோய்களையும் ஏற்படுத்துகிறது.

உரங்கள் மற்றும் பூச்சி விரட்டி: செடிகளை நடவு செய்ததிலிருந்து 15 நாளில், கடலைப்புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு மூன்றையும் கலந்து செடிகளுக்கு அளிக்க வேண்டும். அதன் பின் 15 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம், அமிர்தக் கரைசல் போன்ற இயற்கை உரக் கரைசல்களை கொடுக்க வேண்டும். 10 நாட்கள் இடைவேளையில் செடிகளின் மேல் வெப்பம்புண்ணாக்கு கரைச்சல், இஞ்சி பூண்டு கரைசல் போன்றவைகளை தெளிக்க வேண்டும். மண்புழு உரம் அல்லது புண்ணாக்கு வகைகள் எதுவாயினும், சுழற்சி முறையில் செடிகளுக்கு அளிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஜீவமிர்தம்அளிக்கலாம். இது முடியாத பட்சத்தில் எருவை நிழலில் ஆறவிட்டு அதில் ஜீவமிர்தத்தை கலந்து, நுண்ணுயிரிகளைப் பெருக்கி செடிக்கு செடிக்கு உரமாகவும் வைக்கலாம். Lemon Ginger Mint Juice Recipe: உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ் செய்வது எப்படி..?

சாம்பல் மகத்துவம்: சாம்பல்களைக் கண்டிப்பாக செடிகளின் மேல் 10 நாட்களுக்கு ஒரு முறை தூவ வேண்டும். இது சாறு உண்ணி பூச்சிகளின் தொல்லையை கட்டுப்படுத்துவதில் சாம்பல், பெரும்பங்கு வகிக்கிறது. இது சிறிய வகை பேன், பூச்சி போன்றவைகள் கத்தரியை பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறது. சாணவரட்டியின் சாம்பல் மிகச் சிறந்ததாக இருக்கிறது. பெரிய அளவில் நடவு செய்பவர்கள், காளவாய் சாம்பலைப் பயன்படுத்தலாம். கிடைக்காதபட்சத்தில் அடுப்பு சாம்பல் செடிகளின் மேல் தூவலாம்.

இயற்கை முறையில் கத்தரி விவசாயம், இரசாயன விவசாயத்தை விட அதிக மகசூலை தருகிறது. மண்ணின் வளத்தை பொருத்தே மகசூல் கிடைக்கும். இது நடவு செய்ததிலிருந்து 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். சாராசரியாக நாள் ஒன்றுக்கு, ஏக்கருக்கு 300 கிலோ வரை அறுவடை செய்ய முடியும். அறுவடை ஆரம்பித்ததிலிருந்து 3 முதல் 6 மாதம் காய்களை மகசூல் கிடைக்கும். பராமரிப்பு சிறப்பாக இருந்தால் இது அதிக மாதங்கள் வரை காய்கள் கிடைக்கும். கத்தரியில் மகசூலைப் பொருத்தும் அந்த பகுதியின் சந்தை விலையைப் பொருத்தும் லாபம் கிடைக்கும். மாதம் குறைந்த பட்சம் 60 ஆயிரம் லாபம் ஈட்டலாம். நேரடி சந்தைபடுத்தினால் லட்சங்களில் வருமானம் பார்க்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். முற்றிய காய்களில் இருந்து விதைகளை எடுத்து வைத்துக் கொண்டு அடுத்த பருவத்தில் இவைகளை நாற்றாக்கி நடவு எய்யலாம். விதை எடுத்ததிலிருந்து 60 நாட்களுக்கு பிறகு நடவு நாற்றுகளாக வளர்க்கலாம் என்கிறார் ஜான் இம்மானுவேல்.