மார்ச் 10, சென்னை (Chennai News): நடவு செய்த 8 மாதங்களிலிருந்து அறுவடை செய்து லாபம் ஈட்ட சிறந்த பயிராகும் அத்திப் பழம். இது நடுத்தர மர வகையைச் சேர்ந்தது. இதில் மாம்பழத்தை போன்று அத்தியில், நாட்டு அத்தி, டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி, பிரைவுன் டர்க்கி, இஸ்ரேல் அத்தி என பல வகைகள் உள்ளது. ஆனால் தமிழகத்தில் 3 வகைகளே பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அவைகளில், பழத்திற்காகவா, மதிப்பு கூட்டலிற்காகவ, அல்லது டிரை ஃபுரூட்டாக விற்பனை செய்யவா என முடிவு செய்து அதற்கேற்ற ரகத்தை தேர்வுசெய்து சாகுபடி செய்யலாம். வணிக ரீதியாக ‘பூனா’ என்னும் ரகம் தான் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது என்கிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்மோஹன்.
விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர், பப்பாளி சாகுபடி செய்து வந்திருக்கிறார். அத்திப்பழம் குறித்து ராஜ்மோகன் கூறுகையில், ’முதலில் அத்திப் பழம் கடைகளில் அதிக விலைக்கு விற்பதை பார்த்தேன். பிறகு இது குறித்து தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அன்றைக்கு தமிழகத்தில் அத்தி பயிர் சாகுபடி செய்பவர்கள் அதிகளவில் இல்லை. இது குறித்து தேடுகையில் ஒன்றரை வருடத்திற்கு பிறகு ஆந்திராவின் அந்தபூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 13 வருடங்களாக சாகுபடி செய்வது தெரிகையில் அங்கிருந்து விதைசெடிகளை வாங்கி வந்து நடவு செய்தேன் எனத் தெரிவிக்கிறார். Mangai Sadam Recipe: சுவையான மாங்காய் சாதம் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
அத்தி சாகுபடிக்கு களிமண் அல்லாத பிற நிலங்கள் ஏற்றது. செம்மண் சரளை மண்ணில் நன்கு வளரக்கூடியதாகவும் இருக்கிறது. இதன் ஆயுள் 15 வருடங்களாகும். நிலத்தை நன்கு உழுது 1:1 என்ற வீதத்தில் குழிகளை அமைத்து, செடிக்கு 5 கிலோ தொழுவுரம் வேப்பம்புண்ணாக்கு 50 கிராம், சூடாமோனாஸ் இவைகளை மண்ணில் இட்டு 10 நாட்களுக்கு பின் செடிகளை நடவு செய்ய வேண்டும். இது செடிகளின் வளர்ச்சிக்கு நல்லது. வாரத்திற்கு ஒரு முறை பஞ்சகாவ்யம் செடிகளுக்கு அளிக்க வேண்டும்.
மழைகாலத்தின் தொடக்கத்தில் நடவு செய்தால் மகசூல் அமோகமாக கிடைக்கும். ஏக்கருக்கு 350 செடிகளை நடவு செய்யலாம். வரிசைக்கு 12 அடி இடைவேளியும், செடிகளுக்கு 10 அடி இடைவேளியிலும் நடவு செய்ய வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை 5 கிலோ தொழுவுரத்தை செடிகளுக்கு அளிக்க வேண்டும்.
3 மாதங்களுக்கு பின் செடியில் பிஞ்சுகள் வர ஆரம்பித்து விடும். அந்த சமயத்திலிருந்து செடிகளுக்கு தேவையான சத்துகளை அளிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு வேப்பம்புண்ணாக்கு, மண்புழுவுரம், மற்றும் இயற்கை உரங்களையும் 150 கிராம் அளவில் அளிக்க வேண்டும். இதனால் முதல் வருடத்திலேயே அதிக அளவில் அத்திப் பழங்களை அறுவடை செய்ய முடியும். பறவைகள் இப்பழத்திற்கு அதிகம் வரும் அதனால், அதிகாலையில் பழங்களை பறித்து விட வேண்டும்.
மேலும் காய்கள் காய்க்க ஆரம்பித்ததும், அடுத்த 5 மாதங்களுக்கு தொடர்ச்சியாக அறுவடை செய்யலாம். நாள் ஒன்றுக்கு, குறைந்தபட்சம் 30 முதல் 35 கிலோ வரை மகசூல் கிடைக்கும். வெயில் காலங்களில் 80 முதல் 90 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். காய்ப்பு காலம் முடிந்ததும் செடிகளை காவத்து செய்து விட வேண்டும். 2 வது ஆண்டு 4 முதல் 6 டனாகவும், 3 வது ஆண்டு 6 முதல் 8 டன் ஆகவும் மகசூல் அதிகரிக்கும்.
அத்தியைப் பொருத்தவரையில் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வது தான் சிறந்தது. பழங்கள் முழுவதும் பழுத்த பிறகே பறிக்க வேண்டும். அத்தி பழம் பறித்த 2 அல்லது 3 நாட்களில் கெட்டுவிடும். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அத்திப்பழங்கள் பழுப்பதற்கு முன்பே செடியிலிருந்து பறிக்கப்பட்டு விடுகின்றன. அதனால் அதன் தரம் மக்களுக்கு கிடைக்கும் போது குறைந்து விடுகிறது. 3 நாட்களுக்கு மேல் பழங்களின் சுவைக் குறையத் துவங்கிவிடும். தென் தமிழகத்தில் அதிக விலையில் இது விற்பனையாகததற்கு இதுவே காரணம். அத்தி சாகுபடி செய்பவர்கள் உள்ளூரிலேயே விற்கலாம். கிலோ 150 முதல் 180 வரையிலும் விற்பனை செய்ய முடியும்.
டயனா என்னும் அத்தி ரகம் வகைகள் டிரை ஃபுரூட்:
செய்வதற்காகவே உள்ளன. காய இருக்கும் போதே பறித்து இதனை தாயாரிக்க வேண்டும். பெரிய அளவில் செய்ய நினைப்பவர்கள் இதனை முயற்சி செய்யலாம். ஆனால் வணிக ரீதியாக விரைவில் லாபம் ஈட்ட வேண்டுமெனில் இந்த ‘பூனா’ அத்தி வகை பொருத்தமானது. இந்த வகை பழங்கள் பச்சை மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். வகைகளைப் பொருத்து நிறங்களும் இலைகளின் அளவும் மாறுபடும்.
பூச்சி மற்றும் நோய் தாக்கல்:
பனிகாலத்தில் சாறு உறிஞ்சும் பூச்சியால் பூச்சித்தாக்குதல் ஏறப்படும். அதற்கு மூலிகை பூச்சி விரட்டி, இஞ்சி பூண்டு கரைசலை செடிகளின் மேல் வாரத்தில் நான்கு முறை தெளித்து வந்தால் பூச்சித்தொல்லையைக் கட்டுப்படுத்தலாம்.
இலைகளில் துரு நோய் தொற்று மழைகாலத்தில் வரக் கூடும். இதனால் பழங்களில் கருப்பு புள்ளிகள் காணப்பட்டு மகசூலைப் பாதிக்கும். இதத் தடுக்க மழைகாலத்திற்கு முன் காவத்து செய்து விட்டு வேப்பம்கரைசலை கொடுக்க வேண்டும்.
அதனுடன் காவத்து செய்தால்தான் செடிகளின் கீழ் மழைநீர் தேங்கி ஏற்படும் வேரழுகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.
நர்சரிகளில் கவனம் முக்கியம்:
தமிழகத்தில் விதை செடிகள் அதிகளவில் கிடைக்காது. வெளிமாநிலங்களிலிருந்து தான் பதியம் போட்டதை எடுத்து வந்து வளர்த்து இங்கு பாக்கெட்டில் விற்பனை செய்கின்றனர். மற்றும் மேலும் ஏக்கருக்கு 1000 செடிகள் வைக்கலாம் எனக்கூறியும் விற்பனை செய்கின்றனர். அவ்வாறு 500, 1000 செடிகள் வைத்தால் நிச்சயம் ஒரு காய் கூடவராது. அதே போல பலர் ஆண்டு முழுவதும் காய்க்கும் எனக் கூறி விற்பனை செய்கின்றனர். மேலும் விதைச்செடிகள் வாங்குகையில் அதன் ரகங்களை அறிந்து வாங்க வேண்டும். தவற்றன செடிகளை வாங்கி நஷ்டமடையாமல் இருக்க முதலில் வனக போகும் ரகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இலைகளை வந்து ரகங்களை அறியலாம். நர்சரிகளில் சொல்வதை விவசாயிகள் கேட்க வேண்டாம். எனவும் அக்கறையுடன் எச்சரிக்கிறார் ராஜ்மோகன்.